எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நொய்டா, மே 24 டில்லியில், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த, இக்ராம் (29), பாக்பத்தில் வசிக்கும் ராகுல் (36) ஆகிய இருவரும் சிறுநீரகக் கோளாறால், நொய்டாவில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, மருத்துவர்கள் கூறினர். இவர்களுக்கு யாரும் சிறுநீரகம் கொடையளிக்கவில்லை.

இந்நிலையில், இக்ராமின் மனைவி ரஜியா, ராகுலுக்கும், ராகுலின் மனைவி பவித்ரா, இக்ராமுக்கும் தங்கள் சிறுநீரகத்தை கொடையளிக்க முடிவு செய்தனர். இரு வேறு மதங்களைச் சேர்ந்த இவர்களின் முடிவை வரவேற்ற மருத்துவர்கள், அவர்கள் விருப்பப்படி, இருவரின் கணவன்மார்களுக்கும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின், அனைவரும் நலமுடன் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner