எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை அருகே, கோவில் விழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் குழந்தை உள்பட, ஆறு பேர் காயம் அடைந்தனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நெய்வாசல் கிராமத்தில், மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை கரக திருவிழாவின் போது, பக்தர்கள், வாண வேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்தனர். பட்டாசு, பக்தர்கள் கூட்டத்தில் விழுந்ததில், 2 வயது குழந்தை உட்பட, ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை காவல்துறையினர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்: தீ விபத்து

காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலின் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner