எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கங்கோத்ரி கோவிலுக்குச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பக்தர்கள் பரிதாப சாவு

டேராடூன், மே 25 -மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து சுற்றுலாவுக்குச் சென்ற பேருந்து ஒன்று உத்தராகண்ட் மாநிலம் பாகீரதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பயணிகள் பலியாகினர். காயங்களுடன் 6 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து உத்தர காசி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சிறீவஸ்தவ் கூறும்போது,

“இமய மலையில் உள்ள கங்கோத்ரி கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று திரும்பிக் கொண்டிருந்தது. நலுபானி எனும் இடத்தில் பேருந்து சாலையில் இருந்து விலகி 300 மீட்டர் கீழ் பாகீரதி ஆற்றில் விழுந்தது. இதில் 24 பயணிகள் பலியாகினர். காயங்களுடன் 6 பேர் மீட்கப்பட்டனர். மாநில பேரிடர் மேலாண்மை படையினரும், இந்தோ-திபெத் காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 20 உடல்கள் மீட்கப்பட்டன. விபத்தில் பலி யானோரில் பெரும்பாலானோர் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்” என்றார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத் துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner