எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்பற்றி ஏடுகள் பலவாறாக எழுதுகின்றன. அதிலும் துக்ளக் இதழ் நரநரவென்று பற்களைக் கடித்துக் கொண்டு தாண்டித் தாண்டி குதித்துக் குதித்து எழுது கிறது.

“தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்கிற அடையாளம், நீதிபதி கர்ணனுக்குப் பின்னடைவு என்பதே முரண்பட்ட கருத்தாக இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதி என்கிற அந்தஸ்தை அடைய, அந்த அடையாளம் தடையாக இருக்கவில்லை. அந்த அந்தஸ்தை அடைய அந்த அடையாளமும் கூட, அவருக்குக் கூடுதல் தகுதியாக இருந்தது” என்று துக்ளக் எழுதுகிறது. (விளக்கத் தேவையில்லை - பொடி வைத்து எழுதி இருப்பது புரி யாமலும் இல்லை).

நீதிபதிசி.எஸ்.கர்ணன் நடவடிக்கைகள் அனைத்திற் கும் நாம் ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லை; சிலவற்றை அவர் தவிர்த்திருக்கலாம் என் பதே நமது கருத்து.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் அவர்களால் சென்னை உயர்நீதிமன்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் பார்ப்பனர் எண்ணிக்கை கண்மூடித்தனமான ஆதிக்க எண்ணிக்கையில் இருந்ததால், திறந்த நீதிமன்றத்தில் சி.எஸ்.கர்ணன் பிரச்சினையை எழுப் பினார் என்ற வன்மம் பார்ப்பன வட்டாரத்திற்கு உண்டு.

அந்த மன எரிச்சல், அரிச்சல் நீதிபதி கர்ணன் அவர்களை மலிவாக விமர்சிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பம் வசதியாகக் கைகொடுத்திருக்கிறது என்பதை துக்ளக்கைப் படிக் கும்பொழுது பளிச்சென்று படுகிறது.

இந்த நேரத்தில் 1964 ஏப்ரலுக்கு நாம் செல்ல வேண் டியவர்களாக இருக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த திருவாளர் இராமச்சந்திர அய் யரைப்பற்றிய பூகம்பம் அது.

அதுகுறித்து விடுதலையில் (20.4.1964) தலையங்கமாகவே தந்தை பெரியார் கையொப் பமிட்டு எழுதினாரே!

தலைமை நீதிபதிக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரும் வக்கீல். தம்பியின் பிறந்த தேதி 2.1.1904.

தலைமை நீதிபதியாக இருந்த இராமச்சந்திர அய்யர் வாள் பிறந்த தேதியோ பதிவு களின்படி 1.10.1904. அதாவது தம்பி பிறந்த ஒன்பது மாதங் கள் கழித்து தலைமை நீதிபதி அண்ணன் இராமச்சந்திர அய்யர் பிறந்திருக்கிறார்.

இதனை சென்னை கடற் கரைக் கூட்டத்தில் தந்தை பெரியார் வெளிப்படுத்தினார். ஆக, பதிவேடுகளில் தலைமை நீதிபதி தன் வயதைத் திருத்திய மோசடியில் ஈடுபட்டுள்ளார். தந்தை பெரியார் இதனை வெளிப்படுத்தியவுடன், காதும் காதும் வைத்தாற்போல கால் கடுதாசி எழுதிக் கொடுத்துவிட்டு எஸ்.இராமச்சந்திர அய்யர் வெளியேறி விட்டார்.

அன்றைய குடியரசுத் தலைவரோ ‘தத்துவ ஞானி’  டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன். நடவடிக்கை எடுப்பார்களா? பூணூல் கயிறு தடை உத்தரவுப் போட்டு விடாதா?

அந்த மோசடிபற்றி எந்தப் பார்ப்பன ஏடுகள் கண்டித்தன? தாழ்த்தப்பட்டவர் என்றால் ஒரு பார்வை; பார்ப்பான் என்றால் மாற்றுப் பார்வைதானே! ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இதுதான்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner