எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நியூயார்க், மே 26 உலகின் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் மும்பை 2 ஆவது இடத்தில் உள்ளது. வங்கதேசத் தலைநகர் டாக்கா முதலி டத்தில் உள்ளது.

அய்.நா.வின் மக்கள் வாழ்விடம் குறித்த புள்ளிவிவரங்களின் அடிப் படையில், உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூஇஎப்) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியி ருப்பதாவது:

உலகின் மக்கள் நெரிசல் மிகுந்த நகரமாக வங்கதேச தலைநகர் டாக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 44,500 பேர் வசிக்கின்றனர். அதற்கடுத்து 2 ஆவது இடத்தில் மும்பை உள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 31,700 பேர் வசிக்கின்றனர்.

கொலம்பியாவின் மெடலின் நகரம் 3 ஆவது இடம் (19,700 பேர்), பிலிப்பைன்சின் மணிலா நகரம் 4  ஆவது இடம் (14,800 பேர்), கச பிளாங்காவின் மொராக்கோ நகரம் 5 ஆவது இடம் (14,200) வகிக்கின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner