எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த முறை வடக்கே குடியரசு தலைவர் -

இம்முறை தென் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

காந்தியாரின் பேரனும், பல பொறுப்புகளில் இருந்து அனுபவம் பெற்றவருமான

கோபால கிருஷ்ண காந்தியை

குடியரசு தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும்

தமிழர் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை

காந்தியார், ராஜாஜி ஆகியோர் பேரனும், பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவருமான கோபால கிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

வருகின்ற 2017 ஜூலையோடு தற்போதுள்ள குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது.

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சி தங்களுடைய கொள்கையில் மிகவும் ஈடுபாடும், உறுதியும் உள்ளவரைத் தேர்வு செய்து தங்களது கூட்டணி(NDA) வேட்பாளராக நிறுத்தி வைக்கப்படக்கூடும்.

அதற்காகவே தமிழ்நாட்டு அரசியலிலும் ஆளும் கட்சியோடு பொம்மலாட்டமும் நடைபெற்று வருகிறது! (ஜூலை - குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாட்டு ஆளுங்கட்சியான அதிமுகவின் இரு அணிகளின் எம்.பி., எம்.ஏ.க்களின் வாக்குகளை வாங்கிவிட்ட பிறகு அரசியல் போக்கும், நோக்கும் எப்படி அமையும் என்பது பலராலும் யூகிக்கக் கூடியதே)

இந்நிலையில் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவார் - கருத்திணக்கத்தின் மூலம் என்பது பெரிதும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதே!

இந்நிலையில் நேற்று (26.5.2017) காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களது தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல் முறையாக டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் கூடி கலந்தாலோசித்துள்ளார்கள்.

அடுத்தடுத்து ஆலோசனைகள் தொடரக்கூடும். மரபு முறையில் வடக்கில் சென்ற முறை வாய்ப்பு என்றால் இம்முறை தென்மாநிலங்களுக்கு அந்த வாய்ப்பு வருவதே - தருவதே - முறை யாக பொது வான நாட்டு நலனுக்கு உகந்தது.

அவ்வகையில் காந்தியார்- இராஜ கோபாலாச் சாரியார் அவர்களின் பேரனான திரு. கோபாலகிருஷ்ண காந்தி அய்.எப்.எஸ். அவர்களது பெயர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக முன்மொழிந்து வெற்றிபெற முயற்சிப்பது சிறப்பானது.

அவருக்குள்ள முதல் தகுதி ஜாதி, மத உணர்வு களுக்கு அப்பாற்பட்டவர்; சிறந்த நிர்வாகி, வெளிநாட்டுத் தூதர், ஆளுநர் குடியரசுத் தலைவரின் தனிச்செயலாளர் போன்ற பதவிகளை வகித்த சிறப்பான அனுபவத்தைப் பெற்ற நல்ல பெயர் எடுத்த பொது மனிதர்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவரது எளிமையும், அடக்கமும் அவருடைய வெல்லும் தனிப்பெரும் பண்புகளாகும்!

எனவே அவரை வேட்பாளராக நிறுத்துவது ஒரு மாமனிதரைத் தேர்வு செய்வதாகும்; நாட்டு நலனுக்கு மிகவும் ஏற்புடையதாகும்.

சீரிய ஜனநாயகவாதியும் ஆவார். எதிர்க்கட்சிகள் அணியும் சரி, அவரைப்பற்றி யோசிப்பது விரும்பத்தக்கது.

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


27.5.2017

Comments  

 
#1 meivirumbi 2017-05-27 16:07
கோபால கிருஷ்ண காந்தியை குடியரசு தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும் - கி.வீரமணி- உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாராட்டுகிறேன். உங்கள் உணர்வுகள்- ஒரு தென் இந்தியர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற உணர்வை மிகவும் மதித்து பாராட்டு கிறேன்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner