எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடுவதா?

மத்திய அரசின் ஆணையை நடவடிக்கையைக் கண்டித்து

ஜூன்  1 ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

சுதந்திர நாட்டில் ஜாதி ஒழிப்புக்கான அரசின் திட்டம் என்ன?  - கி.வீரமணி அறிக்கை

பசு, காளை, எருமை, ஒட்டகங்களை உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்னும் மத்திய பி.ஜே.பி. அரசின் மனித உரிமை விரோத, அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை  எதிர்த்து ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மாட்டைக்கடித்து, ஆட்டைக்கடித்து, கடைசியில்  மனிதனை கடித்தது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால் இப்பொழுது சற்று வித்தியாசப்படுத்தி மனிதனை கடித்து மாட்டைக் காப்பாற்றும் தலைகீழ் நிலைக்கு மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான அரசு  நாட்டைக் கொண்டு செல்கிறது

இந்துத்துவா கொள்கைத் திணிப்பு

மிருகவதைத் தடுப்பு என்றபெயரால் மாட்டிறைச்சி உண்ணுவதைத் தடைசெய்யும் ஒரு சட்டத்தையும் மத்திய பிஜேபி அரசு கொண்டுவந்துள்ளது. நாடுமுழுவதும் கால் நடைச் சந்தைகளில் பசு,காளை,எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக கொல்லுவதற்கு விற்கக்கூடாது.விவசாயிகள் மட்டும்தான் சந்தைகளில் கால்நடைகளை விற்கமுடியும்; சந்தைகளுக்கு கால்நடைகளை கொண்டு வருபவர்கள் அவற்றை இறைச்சிக்காக விற்கவில்லை என்பதற்கான உறுதிமொழிச் சான்றை எழுத்துப்பூர்வமாக அளிக்கவேண்டும்.  கால்நடைத்துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெறவேண்டும். இதன்மூலம் மத்தியில் உள்ள பிஜேபி அரசு தனது இந்துத்துவா கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்த முற்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு  முற்றிலும்  விரோத செயல்பாடேயாகும்.

Cruelty to animals Act   என்பது இந்திய அரசியல் சட்டத்தில் 7 ஆவது அட்டவணையில் பொதுப்பட்டியலில் (Concurrent List) 17 ஆவது அம்சமாக அரசியல் சட்ட கர்த்தாக்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாநில அரசுகளுக்கும் இதுபற்றி முடிவெடுக்க, சட்டம் செய்ய உரிமையுள்ளது.மாநில ஜல்லிக்கட்டு சட்டத் திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான் என்பதும் இங்கு சுட்டிகாட்டத் தகுந்ததாகும்.

அரசமைப்பு சட்டவிரோதம்

மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் உள்ள இஸ்லாமி யர்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்படோர், இந்துக்களிலும் பெரும்பான்மையோர் விளையாட்டு, போட்டிகளில் ஈடுபடுவோர், இராணுவத் துறையினர், இப்படி பலருக்கும் மாட்டுக்கறி உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இத்தகைய உணவுப் பழக்கத்தை - அடிப்படை ஜீவாதார உரிமையை மத்திய அரசின் புதிய சட்டம் மறுப்பதோடு அல்லாமல் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைத் தத்துவத்திற்கே விரோதமல்லவா!

விற்பனை செய்யும்முன் அதற்குரிய அதிகாரிகளிடம் இது இறைச்சிக்காக விற்கப்படவில்லை என்று சான்றிதழ் ஆதாரம் பெறவேண்டுமென்றால், சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு இது எவ்வகையில் நடைமுறைச் சாத்தியம்? இதில் லஞ்சம் ஊழல் நுழைந்துவிடாதா?

தமிழ்நாடு, கேரளா, பிஜேபி ஆளும் கோவா மிகவும் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மாட்டுக்கறி மிக முக்கியமான அன்றாட  உணவல்லவா!

மத்திய அரசின் மக்கள் விரோத - அடிப்படை மனித உரிமை விரோத இத்தகைய செயலைக் கண்டித்து 01.06.2017 அன்று காலை 11  மணிக்கு சென் னையில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு  கூட்டமைப்பு சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்  நடைபெறும். 30.5.2017 மாலை  சென்னை பெரியார் திடலில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும்.

மதசார்பின்மையில் நம்பிக்கை உள்ள - மனித உரிமையில் ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரும் ஓர் அணியில் இணைந்து நின்று மத்திய அரசின் காட்டு தர்பாரை முறியடிக்க வாரீர், வாரீர்! என்று அழைக்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர, திராவிடர் கழகம்.

திருச்சி 

27.5.2017

Comments  

 
#2 Sithan R 2017-05-30 10:20
யாருக்காக இந்தத் தடை உத்தரவு???

//உத்திரபிரதேசம், ஆந்திரா , தெலுங்கானா, கேரளா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகியவை அதிகளவில் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது.

மத்திய அரசின் இந்த உத்தரவுகள் அனைத்தும் சாமானியர்களை மட்டுமே நேரடியாகப் பாதிக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் டன் மாட்டிறைச்சி செய்யும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு இந்த உத்தரவால் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.யாருக்காக இந்தத் தடை உத்தரவும்..?//

"அன்று புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரத் தமிழ்ப் பெண்கள், இன்று டாஸ்மாக் கடையை விரட்டி அடிக்க , நம் காவலர் தோழர்களுடன் மல்லுக்கட்ட விட்ட, மது உடல் நலத்திற்கு கேடு ,குடி குடியை கெடுக்கும் என தெரிந்த புண்ணிய ஆத்மாக்கள் ;வெந்ததை தின்று வந்ததை வாழும் மக்கள் ,வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய வள்ளலார் பிறந்த மண்ணில் ,மானமுள்ள தமிழனாக வாழ நினைப்பது குற்றமா ???"
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 Sithan R 2017-05-29 15:02
"மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திர த்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் என்பது என் எண்ணம்."
தமிழ் ஓவியா - (நல்ல பதிவு.- Vedikkai Manithan)//

ஜிங் ஜாங் ஜிங் ஜாங் ..ஆடுவோமே பள்ளு பாடுவோமே ,ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்-- என்று ???
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner