எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, மே 27 கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 7-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த அம்பத்தூரில்  செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி வருமாறு:

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மய்யத்துடன் விவாதிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner