எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவாரூர், மே 29 திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழி தேரோட்டத்தை ஒட்டி, நேற்று, விநாயகர், சுப் ரமணியர் தேரோட்டம் நடந் தது. விநாயகர் தேரின் மேல் அலங்கரிக்கப்பட்ட கட்டு மானப் பகுதி சரிந்ததால், பர பரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில்,  நேற்று விநாயகர், சுப்ரமணியர் தேரோட் டம் நடந்தது. காலை, 5:30 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட விநாயகர் தேர், கீழ வீதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து, மேல வீதிக்கு திரும்பிய போது, அலங்கரிக் கப்பட்ட தேரின், மேல் கட் டுமானப் பகுதி, லேசாக தேரின் வலதுபுறம் சாய்ந்தது.

உடனடியாக தேர் நிறுத் தப்பட்டு, இரும்புக்கம்பி மற் றும் கயிற்றை கொண்டு, சரிந்த கட்டுமானப் பகுதி இழுத்து கட்டப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பின், மீண்டும் விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு, காலை, 10:45 மணிக்கு நிலைக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner