எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தில் உள்ளூர் இளைஞர்கள் தங்கள் ஊர் குளத்தைத் தூர்வாரும் பணியில் இறங்கினர்.

* தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர இதுவரை 79,812 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

* இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அனைவருக்கும் செயற்கைக்கோள் அலைபேசி வழங்க பி.எஸ்.என்.எல். திட்டம்.

* தமிழக வருவாய்த் துறை தற்போது வருவாய் மற்றும் ‘பேரிடர் மேலாண்மைத் துறை' என பெயர் மாற்றப்படுகிறது.

* தஞ்சாவூர் - அதிராமபட்டினத்தில் எரிவாயு உருளை வெடித்து 50 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

* கடும் வறட்சி நிலவுவதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது.

* ஏர் இந்தியா விமான நிறுவனம் 111 விமானங்களை வாங்கியதில் முறைகேடு - சி.பி.அய். மூன்று வழக்குகள் பதிவு.

* ராக்கிங்கிக்கு எதிராக புதிய செல்போன் செயலியை மத்திய அரசு வெளியிட்டது.

* வீட்டிற்கே வந்து ஏ.டி.எம். இயந்திரம்மூலம் வரி வசூலிக்கும் முறையை பூவிருந்தவல்லி நகராட்சி நடைமுறைப்படுத்தியது.

* மாட்டிறைச்சித் தடையை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்துவோம் - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு.

* குழந்தைத் திருமணம் - வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

* தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்வானார்.

* சென்னை உள்பட ஆறு விமான நிலையங்களில் கைப்பேசிகளுக்கு சீலிடும் முறை ரத்து.

* இன்றைய முழு அடைப்பில் 8 லட்சம் மருந்துக் கடைகள் பங்கேற்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner