எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஸம்ருத்யும் ப்ராபஸ்யத் ஸதேவான் நான்வ காமயதைதும் தம் தேவா அப்ருவன்கம் னேஹி ஸைவர்க்வத்வர் லோகம் கமயிஷ்யாம இதி

(அய்தரேய ப்ராஹ்மணம் பஞ்சிகா காண்டம் 6)

பொருள்: யாகத்திற்குக் கொண்டு வந்த பசு மரணத் தைக் காண்கிறது. மரணத்தினின்றும் தேவர்களைக் காண்கின்றது.

தேவர்கள் பசுவைப் பார்த்து, நாங்கள் உன்னை ஸ்வர்க் கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள்.

பசு கொல்லப்பட்ட பிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-

“அந்தரே வோஷ் மாணம் வாரயத்வாதிதி பசுஷ் வேவதத் ப்ராணான் ததாதிஸ்யேன மஸ்யவக்ஷ கருணுதாத் ப்ரசஸா பாஹுசலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித்ரேஸ்ரோணீ வகஷோரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட் விம்சதி ரஸ்ப வங்கரயஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத். காத்ரம் காத்ரமஸ்யானூம்.”

(அய்தரேய ப்ராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகள் அறுத்தெடுத்தபின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.

பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-

“உத்ய கோஹம் பார்த்திவம்“ (அய்தரேய  - பஞ்சி 2. க 6)

பசுவைக் கொல்லும்போது “ஹோதா” என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-

“அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம் சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகாஉர் இதித்ரிர்ப் ரூயாத்”

(அய்தரேய ப்பிராஹ்மணம் பஞ்சிகா 2

காண்டம் 7)

பொருள்: நன்றாக அடித்துக்கொல்! கொல், கொல்! அடிப்பதை நிறுத்தாதே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner