எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலைப்பற்றி உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ள கருத் தைப் படித்தால், இப்படிப்பட்ட படித்த பாமரர்கள் கூட இருக்கிறார்களே என்று எள்ளி நகையாட வேண்டியுள்ளது.

அவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தின் நீதிபதி, பெயர் மகேஷ் சந்திர சர்மா. செய்தியாளர்களிடம் அவர் சொன்ன தகவல் (தயவு செய்து சிரித்துவிடாதீர்கள்!).

‘‘மயில் ஏன் தேசியப் பறவை தெரியுமா? அது ஒரு தீவிரமான பிரம்மச்சாரி. ஆண் மயிலும், பெண் மயிலும் உடலுறவு கொள்வதில்லை. ஆண் மயில் தன் இணையைப் பார்த் துக் கண்ணீர் சிந்தும்; பெண் மயில் அந்தக் கண்ணீரைப் பருகும் - அதன் காரணமாக பெண் மயில் கர்ப்பமாகும்.

இதுதான் மயிலின் புனிதத் தன்மை! ஆகவேதான் பகவான் சிறீ கிருஷ்ணன் மயிலிறகை தன் தலையில் சூடிக் கொள்கிறார். மயில் பாரதத்தின் தேசியப் பறவையாக இருப்பதற்குக் காரணம் அதன் புனிதத்தன்மைதான்.’’

மயிலைப்பற்றிநீதிபதிகள்சொன் னது உண்மைதானா? அறிவியல்பூர்வ மானதுதானா? அடிப்படையான அடி முட்டாள்தனமான அறியாமையின் வெளிச்சம்தான் அவை.

உண்மையில் மயிலின் இனப் பெருக்கம் தான் என்ன?

பொதுவாக இயற்கையில் இன சேர்க்கைக்காக பெண் உயிரிகளை கவர்வதற்காக ஆண் உயிரிகள் சில அழகிய உடல் வடிவங்களை கொண்டிருக்கும். அதற்கு மயிலும் விதிவிலக்கு கிடையாது. மயில் தோகை ஆண் மயிலில் இருக்கும்; ஈர்ப்பின் இரகசியம் இதுதான். மயிலின் இனப்பெருக்க காலத்தினையொட்டி  ஆண் மயிலின் முதுகுப் பகுதியில் இருந்து தோகை வளரும். அந்த காலப் பகுதியில் ஆண் மயில் பொலிவுடன் காணப்படும்.

இனப்பெருக்க கால முடிவில் தோகை படிப்படியாக உதிர்ந்துவிடும். வெப்பம் குறைந்து கார்மேகம் சூழ்ந்த வேளையில்தான மயில்கள் இனச்சேர்க்கை செய்கின்றன.

ஆண் மயில்கள் தமது தோகையை விரித்து ஆடி பெண் மயிலைக் கவர எத்தனிக்கும். எதிர்ப் படும் ஆண் மயில்களை தனது பலமான வலது காலால் தாக்கியும், கொத்தியும் தோற்கடிக்கும். இதைவிட தனது தொண்டைப் பகுதியை தானே கொத்தி தன்னை வருத்துவது போல காட்டிக் கொண்டு பெண் மயிலைக் கவர முயலும்.

இது மயில்களுக்கு மட்டுமேயான இயல்பு. இனச்சேர்க்கை பொதுவாக இரவு நேரங்களில்தான் நிகழும். முட்டை இடும் மயில்கள் 28 நாள்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. மரக் குச்சிகளை கொண்டு நிலத்தில் கூடு அமைக்கின்றன.

இதுதான் மயில் என்னும் பற வையின் உயிரியல்இயற்கைக் கோட் பாடாகும். 23 ஆண்டுகள் உயர்நீதிமன் றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிய ஒருவருக்குத் இது தெரியவில்லை என்றால், என் சொல்ல!

சொல்லியிருப்பவர் பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகப் பீற்றிக் கொள்ளும் ‘பிராமணோத்தமர்!’ தகுதி திறமைக்கே பிறந்தவர்!

அவரைப்பற்றிய மற்றொரு தகவல் முக்கியமானது. உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெறும் கடைசி நாளன்று அவரின் பச்சையான பார்ப்பனத் தனத்தைத் தனக்குத்தானே ‘குடலைக் கிழித்து’க் காட்டிக் கொண்டு விட்டார்.

‘‘மயில் புனிதத்தன்மை உடைய தாக இருப்பதுபோலவே, பசுவும் புனிதத் தன்மை தெய்வத்தன்மை கொண்டது. எனவே, பசுவைத் தேசிய விலங்காகஅறிவிக்கவேண்டும்.பசு வைக் கொல்லுபவர்களுக்கு மூன் றாண்டு சிறைத்தண்டனை போதாது; ஆயுள் தண்டனை அளிக்கவேண்டும்‘’ என்று ஓய்வு பெறும் நாளில் ஓங்கி அடித்துக் கூறியுள்ளார்.

நீதிபதி சி.எஸ்.கர்ணனைக் கேலி செய்யும் பிரகஸ்பதிகள் இந்தப் பிர்மா முகத்துப் புத்திரர்கள்பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

மயிலே நையாண்டி செய்து தோகை விரித்து ஆடினாலும் ஆடக் கூடும்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner