எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதவாதவெறி கொண்டு கிளம்பிவிட்டது காவிக்கூட்டம்

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு

3000 கிலோ எடையில் 2000 ஏக்கரில் சிலையாம்!

பி.ஜே.பி. - சிவசேனா ஆளும் மகாராட்டிரத்தில் திறப்பாம்!

மும்பை, ஜூன் 3 காந்தியாரை சுட்டுக் கொன்ற சித்பவன் பார்ப்பான் நாது ராம் கோட்சேவுக்கு பி.ஜே.பி., சிவ சேனா கூட்டணி ஆட்சி நடத்தும் மகா ராட்டிரத்தில் 3000 கிலோ எடை கொண்ட சிலையை 2000 ஏக்கர் பரப்பளவில் திறக்க இருக்கின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மிகப்பெரிய நினைவகமும் அதனோடு இணைந்து உருவாக்கப்படுமாம்.

இந்து மகாசபா அமைப்பு விரைவில் காந்தியாரை கொலைசெய்த நாதுராம் கேட்சோவிற்கு மகாராஷ்டிராவில் 3000 கிலோ எடைகொண்ட உலோக சிலை மற்றும்பிரம்மாண்டநினைவுவகம் ஒன்றை  அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அகில பாரதிய இந்து மகாசபா காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சேவிற்கு அவரது சொந்த மாநில மான மகராஷ்டிராவில் உள்ள அகமத் நகரில் 3000 கிலோ எடையுள்ள உலோக சிலையை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து மகாசபாவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரமோத் ஜோஷி, ‘இந்தி யன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘கோட்சேவின் சிலையை அமைக்க மும்பைக்கு அருகில் உள்ள கல்யாண் என்ற இடத்தில் இடம் தேர்வு செய்துள்ளோம், அந்த இடத்தில் கோட்சேவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான அனைத்து பொருள்களை வைக்கவும் முடிவு செய்துள்ளோம். முக்கியமாக கோட்சேவைப் பற்றிய பொய்ப் பிரச்சாரத்தால் தவறான முடிவிற்கு வந்தவர்கள், இங்கு வந்து சென்ற பிறகு கோட்சேவை தங்கள் நாயகனாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி. சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் கோட்சே மட்டுமின்றி நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் நினைவகமும் அங்கே அமைக்கப்படும். இதன் மய்யப்பகுதியில் பிரமாண்டமான கோட்சே சிலை அமைக்கப்படும். 3000 கிலோகிராம் (3 டன்) எடையுள்ள உலோகச் சிலை அமைப்பதற்கான பீடங்களும் வெளியிலிருந்து தயார் செய்யப்பட்டு கொண்டுவரப்படும். எங்களைப் பொறுத்தவரை கோட்சே ஒரு நாயகன்; அவரது சிலை இங்கு இருக்கவேண்டும்'' என்று கூறினார்.

இது குறித்து மகாராட்டிரா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் தத் கூறியதாவது: அனைவருடனும் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சி என்று ஆட்சிக்கு வந்த மோடி, இன்று தன்னுடைய சங்பரிவார் அமைப்புகளுடன் தேசப்பிதா காந்தியைக் கொலை செய்த கோட்சேவிற்கு நினைவிடமும் அவரது சிலையையும் அமைக்க முடிவுவெடுத்துள்ளார்.

மோடி ஆட்சியில் இவர்களால் இப்படி வெளிப்படையாக பேசமுடிகிறது; இதுதான் உண்மையான தேசத் துரோக மாகும் என்று கூறினார்.

2014- ஆம் ஆண்டு போபாலில் கோட்சேவிற்கு முதல்முதலாக சிலை அமைக்கப்பட்டது. இது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பிறகு நாதுராம் கோட்சே குறித்த நூல் ஒன்றை இந்து மகாசபா வெளியிட்டது. அந்த நிகழ்ச்சி மகராட்டிர மாநிலம் தானேவில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பல பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். அனைவரும் கோட்சேவை ஒரு நாயகன் என்றும் அவரை தவறான முறையில் சித்தரிக்கிறார்கள் என்றும் பேசினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner