எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புவனேஸ்வர், ஜூன் 3 -கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன்படைத்த, பிருத்வி2ஏவுகணைமீண் டும் வெற்றிகரமாக பரி சோதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநில கடலோர நகரமான பலசோரில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிருத்வி- 2 ஏவுகணை வெள்ளி யன்று காலை 9.50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது அது வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்தது.

நிலத்தில் இருந்து நிலத் திலுள்ள இலக்குகளை தாக் கும்வகையில்,பிருத்விரக ஏவுகணைகளை இந்தியா உரு வாக்கியுள்ளது. அதிகபட்சமாக 350 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை, ஏற்கெனவே வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு ராணு வத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும்,தொழில்நுட்பரீதி யாக இந்த ஏவுகணை மேம் படுத்தப்பட்டு, அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் பிருத்வி- 2 ஏவுகணையில் தற் போது சில மாற்றங்களை செய்துள்ளது.

அதாவது, 9 மீட்டர்நீளமும் ஒரு மீட்டர் சுற்றளவும் 4.6 டன் எடையும் கொண்ட பிரித்வி- 2 ஏவுகணையில், 500 கிலோ முதல் 1000 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை நிரப்பிதாக்குதல் நடத்தும் வகையில் மாற்றங் களைச் செய்துள்ளது. இந்த புதிய வடிவமைப்பே, வெள்ளியன்று நடந்த சோதனையில் வெற்றிகர மாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களையும் ஏந்தி செல்லும்இந்தபிருத்வி-2 ரக ஏவுகணைகள் திரவ எரி பொருளால் இயங்கும் இரட்டை என்ஜின்கள் கொண்டதாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner