எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘மஞ்சள் வாழைப் பழத் தைக் காட்டி ‘வாழைப் பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னால் அப்போது உங்கள் மனஸில் ஒருவிதமான பிரதி உணர்ச்சி உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பது போல் உங்கள் மனஸில் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனஸை ஒரு முகப்படுத்தினால், அப்படிப் பார்க்கவும்முடிகிறது.ஒரு சிலையைக் காட்டி ‘இது பரமாத்மா என்று பாவியுங் கள்’ என்றால் அப்படிப் பாவிக்க முடிவதாகத் தோன் றும்-வாழைப்பழத்தைசிவப் பாகக் கற்பனை செய்வது போல்’’என்கிறார்காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரசுவதி (மறைந்த) (‘கல்கி’, 14.5.2017, பக்கம் 4).

‘‘மூர்த்திவழிபாடு’’என்ற தலைப்பில் மறைந்த காஞ்சிசங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரசுவதியின் அருள் வாக்காக இவ்வாறு ‘கல்கி’ வெளியிட்டுள்ளது.

ஆனந்தவிகடனாக இருந்தாலும் சரி, கலைமகளாக இருந்தாலும் சரி, ‘கல்கி’யாக இருந்தாலும் சரி - அவாள் ஏடுகளில், இதழ்களில் மகா பெரியவாள் என்று மகுடமிட்டு இதுபோன்ற அருள்வாக்குகளை வெளியிடுவது வாடிக்கையான ஒன்றுதான்.

மனதில் தெளிவிருந்தால் வாக்கினில் தெளிவும், துல்லி யமும் இருக்கும். ஆரம்பமே குழப்பமாக இருந்தால், அதன் முடிவும் படுகுழப்பமாகவே இருக்கும் என்பதற்கு இந்தப் ‘பெரியவாளின்’ அருள்வாக்கே போதுமான எடுத்துக்காட்டாகும்.

மஞ்சளாகஇருக்கக் கூடிய வாழைப் பழத்தை சிவப்பு என்று சொன்னால், சொல்லுகிற ஆசாமியின் கண் களில் கோளாறு என்றுதான் உண்மையான புத்திசாலி கருது வான்.

வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள் ளுங்கள் என்று சொன்னால் மட்டும் மஞ்சள் மஞ்சள்தானே தவிர, சிவப்பாகாது.

மேலும் பெரியவாள் கூறு கிறார்:

(பொய் சொல்லச் சொல் லுவதுதான் ஆன்மிகமா?)

‘‘இதை எதற்குச் சொல்லு கிறாராம் - ஒரு சிலையைக் காட்டி ‘இதைப் பரமாத்மா என்று பாவியுங்கள்’ அப்படிப் பாவிக்க முடிவதாகத் தோன்றும் - வாழைப் பழத்தை சிவப்பாகக் கற்பனை செய்வதுபோல்’’ என்று சாதிக்கப் பார்க்கிறார் காஞ்சிபுரத்தார்.

மஞ்சளான வாழைப் பழத்தை சிவப்பு என்று சொன் னால், ஏற்றுக்கொள்ளாத ஒரு வர், ஒரு கல்லைப் பார்த்து பரமாத்மா என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

வாழைப்பழம் மஞ்சளாக இருந்தது எப்படி உண்மையோ - சிலை ஒரு கல்லாகவோ, உலோகமாகவேதான் பகுத்து அறிபவனுக்குப்படும்.

அது சரி, புத்தி குறைந்த வனுக்குத்தான் சிலை வழிபாடு என்று உத்திர கீதையில் அதே ஆன்மீகம் பேசுகிறதே - அதைப்பற்றி ‘மகா பெரியவாள்’ என்ன சொல்றாளாம்?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner