எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருக்கோவிலூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அய்ம்பொன் சிலை, பொருட்கள் கொள்ளை

திருக்கோவிலூர்,ஜூன்4விழுப் புரம் மாவட்டம் திருக்கோவி லூர் அருகே உள்ள சு.பில் ராம்பட்டு கிராமத்தில் அங்கா ளம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் தியாக ராஜன் வீட்டுக்கு சென்றார்.

கோவிலை திறப்பதற்காக நேற்று காலை அவர் வழக் கம்போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் இரும்பு கேட் மற்றும் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இரண்டு உண்டியல்கள் உடைப்பு

மேலும் கோவிலுக்குள் இருந்த 3 அடி உயரம் கொண்ட அய்ம்பொன் அங்காளம்மன் சிலை, கோவில் பீரோவில் வைத்திருந்த பொருட்கள், மூலவரான அங்காளம்மனுக்கு அணிவிக்கும் வைரமூக்குத்தி, விலை உயர்ந்த பட்டுச்சேலைகள் ஆகியவற்றை காணவில்லை. 2 உண்டியல்கள் உடைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்த பணத்தையும் காணவில்லை.

அவற்றை யாரோ கொள்ளை யடித்துசென்றிருப்பதுதெரிய வந்தது. கொள்ளை போனவற் றின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து மோப்பநாயும் வரவ ழைக்கப்பட்டது. அது, கொள்ளை நடந்த கோவிலை மோப்பமிட்டபடி தெருவழியாக அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வரை சென்றது. ஆனால், யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

மேலும் கைரேகை நிபுணர் கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த கோவிலில் கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான  கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

இது குறித்து அரகண்டநல்லூர் காவல்துறையினர்வழக்குப் பதிவு செய்து கொள்ளையர் களைத் தேடி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner