எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 4 தங்களை  படம் எடுக்க மறுத்த கல்லூரி மாணவரை  பசு பாதுகாவலர்கள் குத்தியால் குத்திய சம்பவம் டில்லியில் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.

கேரளாவில் மாட்டிறைச் சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் காங்கிரஸ்கட்சியினர்போராட் டம் நடத்தினர். அப்போது, நடுரோட்டில்மாடு ஒன்றை வெட்டி, சமைத்து, போராட் டக்காரர்கள் பரிமாறினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்குஎதிர்ப்புதெரிவிக் கும் வகையில், தலைநகர் டில்லியில் பசு பாதுகாவலர்கள் கண்டனப் போராட்டம் நடத் தினர். இந்தப் போராட்டத்தை பார்க்க, சிவம் என்ற கல்லூரி மாணவர், பத்திரிகையாளர் ஒருவருடன் வந்துள்ளார்.

அப்போது, தனது நண்ப னின் கேமிரா ஒன்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள் ளார். ஆனால், அவரை பார்த்த போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்எனநினைத் துள்ளனர். கேமிரா வைத்திருப்ப தால், தங்களை போட்டோ எடுக்கும்படி, சிவத்தை கேட் டுக் கொண்டுள்ளனர். ஆனால், சிவம் மறுத்துள்ளார்.

சிவத்தை கெஞ்சி கேட்ட பசு பாதுகாவலர்கள் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்துள்ளனர். போட்டோ எடுக்காமல் எதற் காக இங்கே வந்தாய் எனக் கூறி, அவர்களில் சிலர் சிவம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது மட்டுமின்றி, கத்தியால் சிவத்தின் வயிறு, நெஞ்சுப் பகுதிகளில் குத்திவிட்டு, அவர் கள் தப்பியோடிவிட்டனர்.

படுகாயமடைந்த சிவம் அப்போலோமருத்துவமனை யில்சேர்க்கப்பட்டார். இது பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய டில்லி காவல்துறையினர், மோகித் என்ற நபரை கைது செய்துள்ளனர்.மேலும்,2 பேரை தேடிவருவதாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner