எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நரேந்திர மோடி அரசின் மூன்று ஆண்டுகளை கெண்டாடும் வகையில் மேகாலயாவில் மாட்டுக் கறி விருந்து நடைபெறும் என்று அம்மாநில பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார்.

மத்தியஅரசின் மாடுகள் குறித்த புதிய அறிவிப்பாணைக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பலமாநிலங்களில்மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது மேகால யாவில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் ஒரு வரே, மோடி அரசின் 3 ஆண்டு சாதனையை மாட்டுக்கறி விருந் துடன் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார்.

மேகாலாய மாநிலத்தில் உள்ள வடக்கு கரே ஹில்ஸ் மாவட்டத்தின் தலைவரான பச்சு சாம்புவேங் மராக் என்பவர்  தனது முகநூலில் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:

‘‘பி.ஜே.பி.யின்மூன்று ஆண்டு மோடி அரசாங்கத்தை கொண்டாடுவதற்காக பாரதீய ஜனதா கட்சி மாட்டிறைச்சி விழா வுக்கு ஏற்பாடு செய்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

மேகாலயாவில், பெரும்பாலான பா.ஜ.க. தலைவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள், மேகாலயா வைப் போன்ற ஒரு மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்யப் படவில்லை என்றும்  பாரதீய ஜனதா கட்சி தலைவர் பெர்னார்ட் மராக் கூறியிருந்தார்.

இவர்மட்டுமல்ல;கேரள மாநிலம் மலப்புரம் இடைத்தேர்த லில் போட்டியிடும் பா.ஜ.க. வேட் பாளர் சிறீபிரகாஷ் என்ன சொல்லி வாக்கு சேகரிக்கிறார் தெரியுமா?

‘‘எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்களேயானால் மக்கள் அனைவருக்கும் தடை யின்றி மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன்!’’ என்று கூறி வாக்கு சேகரித்துள்ளார்.

பா.ஜ.க.வின் இரட்டை வேடம் எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்து வழிந்து காணப்படுகிறது. மாட்டிறைச்சி விவகாரத்திலும் அதே இரட்டை நிலைதான்.

இந்த முரண்பாடுகள் ஒரு பக்கம் குப்பைபோல குவிந்து கிடக்கட்டும்; இவர்களின் வேதங் கள் குறிப்பாக யஜுர் வேதம் (யாகங்கள்பற்றிப் பேசும் வேதம் இது) என்ன சொல்லுகிறது?

1. கோஸவம் - பசு மாடு, காளை மாடுகளை கொல்லும் யாகம்.

2. வாய வீய ஸ்வேத பசு - வாயு தேவதைக்காக வெள்ளைப்பசு யாகம்

3. காயம் பசு - தனது எண் ணங்களை கொள்வதற்குரிய யாகம்.

4. அஷ்ட தச பசுவிதானம் - பதினெட்டுப் பசுக்களைக் கொன்று நடத்தும் யாகம்.

இவ்வாறு பசுக்களைக் கொன்று நடத்திய யாகங்கள் பலப்பல உண்டு! இதற்குப் பா.ஜ.க. பரிவாரம் என்ன கூறுகிறது?

இப்படியாகங்களில்கொல் லப்படும் பசு முதலிய இனங் களில் மாமிசத்தை என்ன செய்ய வேண்டுமாம்? இதோ மனுதர்ம சாத்திரம் கூறுகிறது? (மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 35)

சிரார்த்தத்தில் விதிப்படி விதிக் கப்பட்ட மாமிசத்தைத் தோஷம் என்று பிராமணன் புசியாவிட்டால், அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான் என்று மனுதர்மம் சபிக்கிறதே - என்ன சொல்லுகிறது பார்ப்பனீயம் - இந்துத்துவம்?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner