எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வாரணாசி, ஜூன் 5 உபியில் சாமியார் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்துத் துறைகளிலும் செயலாளர் மட்டத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. இந்த மாறுதல் நிர்வாக சீர்திருத்தம் என்று கூறப்பட்டது. ஆனால் வர் ணாஸ்ரம விதிப்படி அவரவருக்கு தகுந்த துறைகள் ஒதுக்கப்பட்டன. இது குறித்து எந்த நாளேடுகளும் வாயைத்திறக்கவில்லை.

வாரணாசி காவல் கோட்டத்தில் உள்ள 23 காவல் காவல்நிலையங்களிலும் பார்ப்பன மற்றும் உயர்ஜாதி அதி காரிகள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்.

மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் காசி பகுதியைச் சேர்த்து  மொத்தம் 23 காவல் நிலையங்கள், உள்ளன. இந்த காவல்நிலையங்களில் இருந்தபிற்படுத்தப்பட்டதாழ்த் தப்பட்ட அனைத்துக் கண்காணிப் பாளர்களையும் எடுத்து விட்டு எல்லா இடங்களிலும் பார்ப்பன மற்றும் உயர்ஜாதி அதிகாரிகளே தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

சப்கா சாத் சப்கா விகாஷ் (அதாவது அனைவருடன் சேர்ந்து அனை வருக்கான வளர்ச்சி) என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடியும், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாதிவாரியாக மக்களைப் பிரித்து ஆட்சிக்கு வந்த சாமியார் ஆதித்யநாத்தும் பார்ப் பனர்களுக்கான ஒரு ஆட்சியை நடத்திவருகின்றனர்.

மோடி ஆட்சிக்கு வந்தது முதலே அவரது தொகுதியான வாரணாசியில் சில காவல்துறை அதிகாரிகளை மாற்றச் சொல்லி உள்துறை அமைச்சகத்திடமிருந்து அறிவுரை வந்தது. ஆனால் முன்பு பதவியில் இருந்த அகிலேஷ் யாதவ், காரணமில்லாமல் அதிகாரிகளை மாற்ற இயலாது என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு மோடியின் தொகுதியான வாரணாசியில் சிறப்பு கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இது குறித்து லக்னோவில் உள்ள முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது,

‘‘வாரணாசி, அலகாபாத் உள்ளிட்ட சிலபுண்ணியஸ்தலங்களின்நிர்வா கத்தில் சில மாற்றங்கள் செய்யப் படவிருக்கின்றன’’ என்று கூறியிருந் தார்கள்.

இவர்ஆட்சிக்குவரும்முன்பு வாரணாசி கோட்டத்தில் 5 பார்ப் பனர்கள், 9 பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள், 4 தாழ்த்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் 5 சிறுபான்மையின(இஸ்லாமிய) அதிகாரிகள் இருந்தனர்.

23 காவல் நிலையங்களிலும்....

இந்த நிலையில் வாரணாசி காவல் கோட்டத்தில் உள்ள 23 காவல் நிலைய தலைமைஅதிகாரிகளின்பெயர்பட் டியல்,  வெளியாகியுள்ளது. பார்ப் பனர் மற்றும் உயர் ஜாதியினர்  நிய மிக்கப்பட்டுள்ளனர்

அவர்களின் பெயர் விவரம் வருமாறு:

நகரம் ராஜேஷ் சிங்

ஆதம்பூர் சேஷ்நாத் சிங்

ராம்நகர் ராஜீவ் சிங்

பெண்கள் புறக்காவல்(வாரணாசி) சரோஜ் சிங்

வாரணாசி புறநகரம் அசோக் சிங்

தசாத்மேச்(வாரணாசி) ராகுல் சுக்லா

லக்ஸ் (காசி காவல் நிலையம்)

சேத்கஞ்ச் ராஜீவ் ரஞ்சன்

ஜோத்பூர் சஞ்சீவ் மிஸ்ரா

சிங்காரா கோபால் குப்தா

போல்பூர் ராஜீவ் குமார் சிங்

லன்கா தேவேந்திர சிங்

மட்டுஅடிஹா அசுதோஷ் குமார் திவாரி

சாரானாத் அகிலேஷ் மிஸ்ரா

ஷிவ்பூர் சிவானந்த மிஸ்ரா

மிர்ச்முராத் சந்தோஷ் சிங்

கம்சோடி சிறிராம் சிங்

படாகாவ் திலிப் சிங்

ரொஹனியார் ஷிதிஜ் திவாரி,

லோஹதா ஷியாம் சுக்லா

ஜன்சா சந்தோஷ் குமார் ரோய்

புல்பூர் அனில் குமார் சிங்

ஜவேபூர் குல்தீப் துபே

மாவட்டங்கள் முழுவதும் பார்ப்பன அதிகாரிகளே!

இது இரண்டாவது மாற்றமாகும். ஏற்கெனவே இவர் பதவியேற்ற இரண்டாவது வாரமே தலைநகர் லக்னோவில் அனைத்து காவல் அதிகாரிகளும் மாற்றப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவருமே பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினராவார்.

லக்னோவில் மொத்தமுள்ள 46 காவல்நிலையங்களிலும் 46 பார்ப்பன உயர்ஜாதி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதில் சில அதிகாரிகளை தலைமைப்பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்க அரசமைப்புச் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கோமதி நகர் காவல் நிலையத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அஜய் திரிபாட்டி, இவருக்கு முன்னாள் பதவி உயர்வு பெறவேண்டிய 4 அதிகாரிகளையும் பின்னுக்குத் தள்ளி இவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

இதே போல் ஜைலோன், கன் னோஜ், போன்ற மாவட்டங்கள் முழுவதுமே பார்ப்பன அதிகாரிகளின் கைகளில் வந்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புகளில் பார்ப்பன உயர்ஜாதியின அதிகாரிகளைத் தவிர்த்து வேறு யாரையும் பார்க்க முடியாது.

ஜைலோனில் வெறும் 0.8 விழுக்காடு மட்டுமே பார்ப்பனர்கள் உள்ளனர். உயர்ஜாதியினர் 5 விழுக்காடு உள்ளனர்.  97 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் வாழும் மாவட்டத்தில் அனைத்து நிர்வாகப்பிரிவுகளிலும் பார்ப்பனர் உயர்ஜாதி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  விரைவில் மீரட், ராம்பூர், ஆஜம்கட் மற்றும் பரேலி மாவட்டங்களிலும் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர். அங்கும் பார்ப்பன உயர்ஜாதியினரே நியமிக்கப்பட உள்ளனர். இது குறித்த பட்டியல் விரைவில் வெளியாகும்.

சாமியாரின் இந்த நடவடிக்கைகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட உயரதிகாரிகள் மத்தியில் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner