எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பானிபட், ஜூன் 5 அரியானா வில்ஆதரவின்றிதெருவில் சுற்றித் திரியும் சுமார் பத் தாயிரம் காளை மாடுகளை மத்திய பிரதேச மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ய அரியானா அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு ஆகும் பயண செலவை இரு மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள முன்வராத தால்,  அக்காளைகள் இன் னும் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டு வருகின்றன.

2016ஆம்ஆண்டுஅரி யானாசட்டசபை கூட்டத் தொடரின்போது,  மாநிலத்தி லுள்ள 400-க்கும் மேற்பட்ட கோசாலைகளில்   கிட்டத்தட்ட மூன்றுலட்சத்துக்கும்மேல் உள்ள பசுக்கள் பராமரிக்கப் படுகின்றன.   ஆயினும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட காளைகளும், பசுக்களும் ஆதரவின்றி உள்ளன என அரசு தெரிவித்தது.

இவைகளில் பசுவுக்கு ஆதரவு கொடுக்கும் பலரும் காளை மாடுகளைக் கவனிப் பதில்லை. இதன் காரணமாக  காளை மாடுகள் ஆதரவின்றி தெருவில்  சுற்றித் திரிகின்றன. பொதுவாக விவசாயிகள், நிலத்தை உழுவதற்காக காளைகளைக் கொண்டுஏர் உழுவதுவழக்கம்.ஆனால், தற்காலங்களில் அரியானாவில்டிராக்டர் மூலம்உழுவது அதிகமான தால் காளைகள் கவனிக்கப் படாமல் விவசாயிகளால் விடப்பட்டுள்ளன.

இவ்வாறு அனாதையாக விடப்படும் காளை மாடுகள் அப்பகுதிகளிலுள்ளதெரு வில் உணவுக்காக சுற்றித் திரிகின்றன. இதன் காரண மாக போக்குவரத்து நெரிச லும், விபத்துக்களும் அரி யானாவில் பெருகி விட்டன. இதனால் அரியானாவின் கவு சேவா அயோக்  என்ற  நிறுவனம், மத்திய பிரதேச மாநிலத்துக்கு காளைகளை இலவசமாக கொடுக்க முன் வந்துள்ளது.

ஆனால்,  ஒரு காளையை சாலை வழியாகக் கொண்டு செல்ல சுமார் ரூ. 2000 வரை செலவாகிறதென்றும்,  அதற் கான செலவு தொகையை மத்தியப் பிரதேச அரசு ஏற்க மறுக்கிறதென்றும், அத னாலேயே இந்தத் திட்டம் இப்போதுகிடப்பில் போடப் பட்டதாகவும் அரியானா அரசு சார்பாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து,  காளை களை ரயில்மூலம் மத்திய அரசுமூலம் அனுப்படும் சாத்தியக் கூறுகளை இப் போது ஆராய்ந்து வருவதாகக் கூறும் அரியானா அரசு நிறு வனம், இந்த செலவை மத்திய பிரதேச அரசும்,  விவசாயிகளும், அரியானா அரசும் சேர்ந்து ஏற்றுக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் நிறைவேறு மானால், இந்த அரியானா காளைகள் மத்தியப் பிரதேச விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.  இதைப் பெற்று, அந்த மாநில விவ சாயிகள்,காளைகளைவிவ சாயத்துக்கு மட்டும் பயன் படுத்தவேண்டும் என்றும், எந்தக்காலத்திலும்விற்கமாட் டோம்எனவும்உறுதிஅளிக்க வேண்டும்என கூறப்படு கிறது. இதன் மூலம் வயதான காளைகளை அடிமாடாக விற்பது நிறுத்தப்படும் என நம்பப்படுகிறதாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner