எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மாணவர்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பியது

புதுடில்லி, ஜூன் 6 இஸ்லாமிய நோன்பு விருந்து ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்களிலும், வீடுகளிலும், மதாராசாக்களிலும் துளசிச்செடியை வளர்க்கவேண்டும், இறைச்சி உண்பதைத் தவிர்க்கவேண்டும். இதனால் உங்களுக்குச் சுவர்க்கம் செல்லும் வழி திறக்கும் என்று  கூறியுள்ளார். இதன் காரணமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இஸ்லாமியப் பிரிவு என்று கூறப்படும் முஸ்லீம் ராஷ்டிய மஞ்ச் என்ற அமைப்பு நோன்பு திறக்கும் விழாவை நடத்திவருகிறது. தலைநகர் டில்லியில் உள்ள ஜாமியா மில்லான இஸ்லாம் கல்லூரி வளாகத்தில் நடந்த இப்தார் திறப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

துளசி வளருங்கள்

‘‘இன்று உலக சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நாளாகும்; இந்த நாளில் நாம் வீடுகளில் துளசி வளர்க்கவேண்டும். துளசி யில் அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளது. ஆகையால் இஸ்லாமியர்கள் துளசிச் செடியை வளர்க்கவேண்டும், மசூதிகளிலும் வீடுகளிலும், மதராஸாக்களிலும் துளசிச் செடிகள் வளர்க்கவேண்டும், இதற்காக முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் துளசிச் செடிகளை அனைத்து இஸ்லாமியர்களுக்கு வழங்கும், துளசிச் செடியை தினமும் சுற்றிவந்தால் நோய் நொடியில்லாத வாழ்க்கை வாழலாம், முன்பு நமது முன்னோர்கள் துளசிச்செடியின் மகிமையை கண்டுதான் வீடுகளில் துளசிச் செடியை வளர்த்து வந்தார்கள்.

துளசிசெடியை வளர்ப்பதால் வீட்டில் தெய்வீகக்களை இருக்கும், இதனால் நமக்கு சொர்க்கம் செல்லும் வழி திறக்கும், இஸ்லாமியர்கள் சுவர்க்கம் செல்வதை அதி கம் விரும்புவார்கள், குரானிலும் இது கூறப்பட்டுள்ளது, ஆகையால சுவர்க்கம் செல்ல எளிதான வழி வீட்டில் துளசியை வளர்க்கவேண்டும்

இறைச்சியை விட்டுவிடுங்கள்

அதேபோல் இஸ்லாமியர்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும், வீடுகளில் துளசியை வளர்க்கும் போது வீடுகளில் நல்ல ஒரு சூழல் நிலவவேண்டும், மாமிசம் சாப்பிடுவதால் வீடுகளில் ஒழுக்கக்கேடான சில செயல்கள் நடக்கும், முகமது நபிகளும் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்துவந்தார். அவர் இறைச்சி சாப்பிடுவது உடல் நிலைக்குக் கேடு என்று கூறினார். முக்கியமாக பல நோய்களுக்குக் காரணம் இறைச்சியே! ஆகவே, இஸ்லாமியர்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும், என்று கூறினார்.

மாணவர்கள் போராட்டம்

இந்திரேஷ் குமாரின் இப்தார் நோன்பில் சர்ச்சைக்குரிய பேச்சு ஜமியா மில்லனா இஸ்லாமியக் கல்லூரி மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய மாணவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு அமைப்பாகும், அந்த அமைப்பு இஸ்லாமியர்களுக்காக எப்படி நல்லதை செய்யும்? ஏற்கெனவே இவர்களின் தலைவர் (மோகன் பாகவத்) இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் இதர மதத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்துக்களாகவே பார்க்கப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும் இஸ்லாமியர்கள் கிருஷ்ணனையும், ராமரையும் வணங்கவேண்டும் என்றும் கூறினார்.

நாங்கள் இறைவனை மனிதர் உருவில் வணங்குவதில்லை, ஆனால், இவர்கள் எங்களை அடிமைப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். முன்பு எங்களின் வாழ்வுரிமைகளில் தலையிட்டவர்கள். இன்று எங்கள் வழிபாட்டுத் தலத்திலும், வீடுகளிலும் வந்து எங்களின் கலாச்சாரத்தை சீரழிக்கப் பார்க்கின்றனர்.

மாடுகளும், ஒட்டகங்களும் பெரும் கூட்ட மாக வாழும் மக்களின் பசியைப் போக்கியும், அவர்களுக்கு உடல் உழைப்பிற்கு ஏற்ப சக்தியைத் தரும். ஆகையால், மனிதர்களின் உணவிற்காக படைக்கப்பட்டதாகும். ஆனால், இந்திரேஷ் குமார் முகமது நபிகள் இறைச்சியை வெறுத்தார் என்று கற்பனைக் கதையைக் கூறுகின்றார்.

ஏற்கெனவேஇந்தஆண்டுஇப்தார்விருந் தில் தேவையில்லாமால் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நுழைந்து பசுப் பாதுகாப்பு குறித்து பிரச்சாரங்கள் செய்கின்றனர். இதுதேவையில்லாத பிரச்சி னையை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் துளசிச்செடி வளர்க்கவும், வீடுகளில் இறைச்சியை சாப்பிடக்கூடாது என்றும் பேசிவருகிறார்.

மாணவர்கள் மீதுதாக்குதல்

இந்திரேஷ் குமார் கலந்துகொண்ட இப்தார் விருந்தை விமர்சித்த மாணவர்களை கல்லூரி வாசலுக்கு வெளியே வைத்து சிலர் தாக்கி யுள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்து புகார் அளித்தும் வராத காவல்துறையினர், சம்பவம் நடந்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிய பிறகு கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தி யுள்ளனர். இதனால் தாக்குதலுக்கு ஆளான மாணவர்கள் காவல்துறையினரை எதிர்த்து சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குறிப்பு: இந்த இந்திரேஷ்குமு£ர் அஜ்மீர் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் இடம்பெற்ற குற்றவாளியாவார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner