எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஷில்லாங், ஜூன் 6 இறைச்சிக்காக மாடுகளை வெட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தில் மேலும் ஒரு தலைவர் பா.ஜ.க.விலிருந்து விலகியுள்ளார்.

இறைச்சிக்காக மாடு, எருது மற்றும் ஒட்டகங்களை வெட்ட மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையி லான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு (2018) சட்டசபை தேர்தல் வருகிறது. மேகாலயா மாநிலத்தின் காரோ மலைப் பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட் மாரக். இவர் பா.ஜ.க.வில் மேற்கு காரோ மாவட்டத்தின் தலைவர் பொறுப்பில் உள்ளார். மேகாலயாவில்அடுத்தஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால்மக்களுக்குகுறைந்த விலையில் மாட்டிறைச்சி கிடைக்க வழிவைக் செய்யப் படும் என்று பெர்னார்டு வாக்குறுதியளித்தார். பெர் னார்டின் இந்த பேச்சு அக்கட் சியினரிடையே பெரும் சர்ச் சையை கிளப்பியது.

மத்திய அரசின் கால்நடை விற்பனை விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைவர் பெர்னார்டு கட்சியில் இருந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் விலகினார். இந் நிலையில், பா.ஜ.க.வின் வடக்கு காரோ மாவட்டத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் பாச்சு மாரக் நேற்று அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

மாட்டிறைச்சி என்பது தங் களது கலாச்சாரத்தில் இருப்பது எனவும், அதற்கு துரோகம் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய பதவி விலகல் கடித்தத்தை கட்சிமேலிடத்திற்குஅனுப்பி யுள்ளதாகவும் மராக் தெரிவித் துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner