எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 7 இந்துத்துவக் காலிகளால் தாக்கப்பட்ட சென்னை அய்.அய்.டி. மாண வர் சூரஜை சந்தித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கடந்த மாத இறுதியில் பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை இறைச்சிக்காக விற் பனை செய்வதைத் தடுத்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. இதனைக் கண்டித்து நாடெங்கும் பெரும் எதிர்ப்பலை உருவானது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான மாட்டுக்கறி திருவிழாக்கள் நடை பெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னை அய்.அய்.டியில் கடந்த மே 28 அன்று  மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு மாட்டிறைச்சி உண்டு மத்திய அரசுக்கு எதிர்நிலைப்பாட்டைத் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமுற்ற அய்.அய். டியில் படிக்கும் வடநாட்டு இந்துத்துவக் காலிகள் சிலர், மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தவர்களுள் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சூரஜ் என்பவரை மே 30 அன்று அய்.அய்.டி வளாகத்திற்குள்ளேயே பலர் முன்னிலையில் மிகக் கடுமையாகத் தாக்கி னர்.

தாக்குதலைத் தடுக்கச் சென்ற நண்பரையும் தடுத்து நிறுத்திவிட்டு நடத்தப்பட்ட இந்த கொலை முயற்சியால் தலையிலும், கண்ணிலும் மிக மோசமாகக் காயமுற்ற மாணவர் சூரஜ் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கண் தவிர பிற இடங்களிலும் பிரச்சினை இருப்பதால் அவரை வேறு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லுமாறு சங்கர நேத்ராலயா மருத்துவமனை கூறிவிட்டதால், சென்னை அயனம்பாக்கத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாண வர் சூரஜுக்கு ஆகும் செலவை அய்.அய்.டி நிர்வாகம் ஏற்க வேண்டுமென்று தொடர்ந்து மாணவர்கள் போராடி வரும் நிலையில், இதுவரை மாணவர்கள் இணைந்து சில லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

சூரஜ் தாக்கப்பட்டது குறித்தும், அவருக்கு மருத்துவ உதவியை விரைந்து தாமதமின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், தாக்கிய கும்பல் கைது செய்யப்படவேண்டு மென்றும் தாக்குதல் நடைபெற்ற அன்றே (மே 30) ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் பெரியார் திடலில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தி லேயே தமிழர் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். மாணவரின் உடல்நலன் குறித்து தொடர்ந்து தமிழர் தலைவர் அவர்கள் விசாரித்து அறிந்து வந்தார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சை நிறை வுற்று மருத்துவமனையில் உடல்நலம் தேறி வரும் மாணவர் சூரஜை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நேற்று (6.5.2017) சந்தித்து நலம் விசாரித்தனர்.

தாக்குதல் நடைபெற்றதற்கான காரணம், பின்னணி குறித்த விவரங்களைக் கேட்டறிந்த அவர்கள், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், உடல்நலன் முன்னேற்றம் குறித்தும் விசாரித்தனர். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சூரஜைப் பார்க்க விரும்பியதையும், சூரஜ் நலம் பெற திராவிடர் கழகத் தலைவரின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மதவாத வன்முறைகளுக்கு ஒருபோதும் தமிழகத்தில் இடமளிக்க முடியாதென்றும், சூரஜுக்கு எப் போதும் கழகம் உடன் நிற்கும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர் சோ.சுரேஷ், அய்.அய்.டி. அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள், சூரஜின் உறவினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சூரஜ் மீதான தாக்குதலுக்குக்கண்டனம்தெரிவித்தும்,தாக்கு தலில் ஈடுபட்டோரை கைது செய்யக் கோரியும் தொடர்ந்து அய்.அய்.டி மாணவர்கள் குரலெழுப்பி வருகின்றனர். எனினும் அய்.அய்.டி நிர்வாகம் இது குறித்து வெளிப்படையான நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner