எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ராஞ்சி, ஜூன் 8 பாஜக ஆளும் மாநிலமான ஜார்க்கெண்ட் மாநிலத்தில் இரண்டு வகுப்பினருக்கிடையிலான மோத லால் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் உள்பட ஏராளமானவர்கள் படுகாயமடைந்தார்கள்.

ராஞ்சி மாவட்டத்தில் சுகுர்குட்டு கிராமத்தில் இரவு நேரத்தில் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக ஒதுங்கியபோது, மற்றொரு வகுப் பைச் சேர்நத் இளைஞர்கள் சிலர் அவர்களிடம்  தவறாக நடந்து கொண்டுள்ளனர். அதனையடுத்து இரு வகுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை முற்றி மோதலாக வெடித்தது. கல்வீச்சு, கலவரமயமானது. காவல்துறை அலுவலர் ராஜிவ் ரஞ்சன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். கலவரமான சூழல் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. காவல்துறையினர் குவிக்கப்பட்ட பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது என்று ராஞ்சி காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் திவேதி கூறினார்.

ராஞ்சி மாவட்டத்தில் பர்காய் பகுதியில் இரு வகுப்பினருக்கு இடையில் கடந்த வாரத்தில் மோதல் ஏற்பட்டது. ஒரு வகுப் பினரின் திருமண விழாவில் இசையொலிப்பதை நிறுத்த வேண்டும் என்று மற்றொரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதை அடுத்து மோதல் வெடித்தது. அம்மோதலில் குழந்தைகள், பெண்கள் என திருமண விழாவில் திரண்ட அனைவரும் தாக்கப்பட்டனர்.

பாஜக ஆளும் ஜார்க்கெண்ட் மாநிலத்தில் எந்த இடத்தில் எப்போது வகுப்புக்கலவரம் வெடிக்குமோ என்கிற பீதியில் மக்கள் உள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner