எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய பி.ஜே.பி. அரசின் மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

திருவனந்தபுரம், ஜூன் 6 மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு தடை உத்தரவுக்கு எதிராக கேரள மாநில சட்டசபையில் இன்று (8.6.2017) தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

புதிய சட்டம்

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் உத்தரவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒருவரின் உணவுப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூறினர். மேலும் இந்த உத்தரவை பின் வாங்கக் கோரி, மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டங்களும் நடத்தினர். மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக்கோரி முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவுகுறித்துவிவாதிப்பதற்காககேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டம் திருவனந்த புரத்தில் இன்று (8.6.2017) நடந்தது. காலை 9 மணிக்கு கூட்டத்தைப் பேரவைத் தலைவர் சிறீராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களும் பங் கேற்றனர்.

மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கூட் டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசின் புதிய உத்தரவால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், சுமார் 5 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இது தொடர் பாக சட்டசபையில் அனைத்துக்கட்சி தலை வர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இத்தீர்மானத்திற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அதன் கூட்டணி கட்சி களும் ஆதரவு தெரிவித்தன. இதுபோல காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கேரள சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே உள்ளார். அவர், இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் இத்தீர்மானம் சட்டசபையில் எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேறும்.

மாட்டிறைச்சி வறுவல்

இன்று காலை விவாதத்திற்கு முன்ன தாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாட்டி றைச்சி வறுவல் வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner