எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரித்துவார், ஜூன் 9 இந்துக்கள் வாழும் பகுதியில் இஸ்லாமியர் வாழக்கூடாது என்று மிரட்டி இஸ்லாமியப் பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அரித்துவார் பகுதியில் பதட்டம் நிலவிவருகிறது, உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் உள்ள ஜவால்பூரில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர், முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அங்கு இந்துக்கள் அதிக உள் ளனர். ஆகவே இங்கு இஸ்லாமியரான நீ இருக்கக் கூடாது என்று சில இந்து அமைப்புகள் மிரட்டல்விடுத்திருந்தன. இதனை அடுத்து அந்தப் பெண் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இத னால் ஆத்திரமடைந்த அக்கும்பல் அப் பெண்ணிடம்சண்டையிட்டுள்ளனர். மேலும் இனி இந்தியாவில் இஸ்லாமியர் களுக்கு இடமில்லை என்று தகராறு செய்துள்ளனர்.அந்தஅமைப்பைச்சேர்ந்த முன்னாள்ராணுவவீரர்சுதிர்சிங்தோமார் என்பவர்துப்பாக்கியைக்காட்டியும்மிரட்டி யுள்ளார். இதனால் மீண்டும் காவல்துறையில் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில்அந்தமுஸ்லீம்இளம் பெண், கல்லூரிக்குச் சென்று கொண்டிருந் துள்ளார். அப்போது பைக்கில் வந்த சுதிர் சிங், அந்த இளம்பெண் மீது ஆசிட் வீசியுள்ளான். கடும் காயத்தினால் அலறித் துடித்த அந்தப் பெண்ணை, அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பெண்ணின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்துக்கள் வாழும் பகுதியில்இஸ்லாமியர்கள்தங்கத் தேவையில்லை என்று அங்குள்ள இந்து அமைப்பினர் கூறியுள்ளனர். அப்படி எங் களது உத்தரவையும் மீறி அவர்கள் தங்க முற்படுவார்களானால், விளைவு மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் காவல்துறையினர் இவ் விவகாரம் தொடர்பாக கூறும்போது, இது இரண்டு பேருக்குள்ள பிரச்சினை. இதை மத விவகாரத்துடன் பார்க்கவேண்டாம் என்று கூறிவிட்டனர். மேலும் ஆசிட் வீசிய குற்றத்திற்காக சுதிர்சிங் தோமரை கைது செய்து விசாரனை செய்துகொண்டு வருகின்றனர்.

அரியானாவில்2014நவம்பரில்பாஜக ஆட்சிஅமைந்ததும்இதேபோல்இஸ்லாமி யர்களைவிரட்டினர்.கிராமங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இஸ்லாமியர் களை அகதிகளாக இடம்பெயர வைத்த னர். தற்போது  உத்தரகாண்டிலும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு பாஜகவினரும், இந்து அமைப்பினரும் சேர்ந்து இஸ்லாமி யர்களை விரட்டி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner