எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்து மதம் என்கிற போது அதன் தலைவர்களாக சங்க ராச்சாரியார்களும், ஜீயர்களும் உள்ளனர். அவர்கள் தெரி விக்கும் கருத்தைத்தான் இந்து மதத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பார்க்கும் பொழுது அடிப்படையில் அவர்கள் தீண்டாமையை ஆதரிப்பவர்களாகவே இருக் கிறார்கள். அதாவது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர் களாகவே இருக்கிறார்கள்.

இதோ சிருங்கேரி சங்கராச் சாரியார் பேசுகிறார்:

"The Panchama is asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soap and any clothing and decoration of it in the best up-to-date style cannot remove from it its inlaid filth that has originated from the deep-rooted contamination of filthy heredity. The provision for keeping the impure at a distance is, strictly speaking a rule of segregation."

"பஞ்சமர்கள் என்று கூறப் படும் தாழ்த்தப்பட்டவர்களை கிட்டே நெருங்காதே - தூர நில் என்று சொல்லுவதற்குக் கார ணம் பிறப்பின் அடிப்படை யிலே வந்த அவர்களின் புனித மற்ற தன்மைதான்; உலகில் மிக உயர்ந்த வகை சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன அணி மணி, ஆடை அலங்காரங்கள் செய்தாலும் பரம்பரைப் பரம்பரையாக வந்த அவர்களின் அருவருப் பான இழிநிலையிலிருந்து அவர்களை விடுவிக்க முடி யவே முடியாது. அவர்களைத் தூர நிற்க வைக்கும் ஏற்பாடா னது ஒரு வகையில் தனிமைப் படுத்தி ஒதுக்கி வைத்தலே." இப்படி சொல்லியிருக்கிறார். சிருங்கேரி சங்கராச்சாரியார் என்று நாம் எழுதியபோது 'அதெல்லாம் சுத்தப் பொய்! ஆதாரத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்று சமூக வலைதளங்களில் சலாம் வரிசை ஆடித் தீர்த்தார்கள்.

ஆதாரம் இல்லாமல் எதையும் 'விடுதலை' எழுதாது - தந்தை பெரியார் பயிற்றுவித்த முறை அப்படி.

ஆதாரம் இதோ: நூலின் பெயர்: "The Hindu Ideal" - Page 230

போதுமா ஆதாரம்? இதற்கு மேலும் துள்ளுவார்களா?

சொன்னதை ஒப்புக் கொள் ளும் சொரணை இல்லாதவர் களிடம் என்ன பேசி என்ன பயன்?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner