எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பற்றி எரிகிறது! பற்றி எரிகிறது!! பா.ஜ.க. ஆளும் ம.பி.

விவசாயிகளை சுட்டுக் கொன்று விட்டு பட்டினிப் போராட்டம் நடத்தும் பிஜேபி முதல்வர்

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்!

சென்னை ஜூன் 10 மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரை காவல் துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில், அமைதி திரும்பக் கோரி இன்று அங்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்  பட்டினிப் போராட்டம் மேற்கொண் டுள்ளார்.

பாஜக ஆட்சியின் கீழ் உள்ளது மத்தியப் பிரதேசம். இங்குள்ள மாண்ட்சவுர் நகரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர். கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட் டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடவடிக்கையில் இறங்கினர். இதில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் கொல் லப்பட்டனர்

இது பெரும் அதிர்ச்சி அலையை ஏற் படுத்தியது. மாநிலம் முழுவதும் போராட் டம் பரவியுள்ளது. இதனால் பதற்றம் நிலவி வருகிறது. மத்திய காவல் படையினரும் மத்தியப் பிரதேசத்தில் முகாமிட் டுள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக முதல் வர் சவுகான் கூறியிருந்தார். இந்த நிலை யில் நேற்று காலை போபால் தசரா மைதா னத்தில் பட்டினிப் போராட்டம் நடத்த தொடங்கினார். அது போல் அங்கிருந்தே அவர் அலுவல்களையும் செய்வதாக கூறி யதை அடுத்து அவருடைய முக்கிய செயலாளர்களும் தசரா மைதானத்திற்கு வந்துவிட்டனர்.

தலைநகரிலும் தொடங்கியது போராட்டம்

மண்ட்சவுர், ரிவா, ரத்லம், ஜபல்பூர், போன்ற மாவட்டங்களில் வெடித்த போராட்டம் தற்போது தலைநகரையும் தொட்டுவிட்டது. போபாலில் நேற்று மாலை ஏழு வாகனங்கள் போராட்டக் காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதற்கு முன்பாக வியாழன் அன்று நடந்த போராட்டத்தில் படுகாயமுற்ற நிபின் என்ற 20 வயது மாணவர் மருத்துவமனை யில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த தகவலைக் கேட்டதும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்தது, இதுவரை நடந்த விவசாயிகள் போராட்டங்களில் வயதானவர்கள் அதிகம் கலந்து கொண் டனர். ஆனால் தற்போது நடந்துவரும் போராட்டங்களில் இளைஞர்களே அதிகம் பங்கேற்றனர். திங்களன்று நடந்த துப்பாக் கிச்சூட்டில் மரணமடைந்த அய்வரில் கல்லூரி மற்றும் 12 வகுப்பு மாணவர்களும் அடங்குவர்.

பாஜக ஆளும் நான்கு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் வேளையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், பீகார் தலை நகர் பாட்னாவில் யோகா செய்து கொண்டி ருந்தார். அதே போல் தற்போது முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பட்டினிப் போராட் டம் நடத்துகிறார்.

முதல்வர்மீதான விமர்சனம்

சிவ்ராஜ் சவுகான் விவசாயிகள் போராட் டத்தை நிறுத்துவதை விட்டு விட்டு பட்டினிப் போராட்டம் இருப்பதை  பெரும்பாலான மபி மக்கள் வெறுப்போடு பார்க்கின்றனர்.

சமூகவலைதளத்தில் நாடக நடிகர் சிவ்ராஜ் சவுகான் என்று கூறும் விதமாக #ழிணீutணீஸீளீவீஷிலீணீஸ்ஸிணீழீ  என்று எழுதி அவரை நையாண்டி செய்துவருகின்றனர்.

மற்றுமொருவர் இந்தியில்

"சிவ்ராஜ்சிங் சவுகான் ஒன்றும் காந்தி யல்ல; ஏர்வாடா சிறையில் இரட்டை வாக்கு உரிமையை கைவிட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க....

விவசாயிகள் ஒன்றும் அம்பேத்கர் அல்ல, மனம் இரங்கி இரட்டை வாக்கு உரிமையை விட்டுக் கொடுக்க" என்று பதிவிட்டுள்ளார்.

Comments  

 
#1 Pugazhendhi 2017-06-11 22:37
பாரதீய ஜனதா கட்சியின் வஷிஷ்டரான மோடியால் பல சந்தர்ப்பங்களில ் புகழப்பட்ட இந்த முதலமைச்சர் இரண்டு மாதத்துக்கு முன்னர் இந்த நாட்டின் "மூளை"என்று ஆட்சியாளர்களால் மட்டுமே கருதப்படும் நிதி ஆயோக் கூட்டத்துக்கு சென்றிருந்தார்.விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க பின்வரும் ஐந்து ஆலோசனைகளை முழங்கினார்.1 )விவசாய உற்பத்தி செலவை குறைக்கவேண்டும் (2 )உற்பத்தி திறனை உயர்த்தவேண்டும் (3 )பணப்பயிர் விளைவிக்க ஊக்கம் அளிக்கவேண்டும் (4 )விளைபொருட்களுக ்கு கட்டுப்படியாகும ் விலையை கொடுக்கவேண்டும் (5 )விவசாயிகளின் இழப்பிற்கு தாமதமில்லாமல் இழப்பீடும் காப்புறுதி திட்டங்களும் கிடைக்க வழி செய்யவேண்டும்.ஆனால்,விளைபொருட ்களுக்கு உரிய விலையும் கடன் தள்ளுபடி கேட்டு போராடிய விவசாயிகளின் மேலே துப்பாக்கி சூடு நடத்திவிட்டு "அமைதி"வேண்டி காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு இரண்டாம் நாள் தானாகவே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ுவிட்டார்.நிதி அயோகில் பேசியதை இவரே நடைமுறைப்படுத்த வில்லை மற்ற முதலமைச்சர்களிட ம் கரகோஷம் பெற மட்டுமே தான் பேசினாரா?குருவுக்கு ஏற்ற சிஷ்யன்தான்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner