எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ம.பி.யைத் தொடர்ந்து மகாராட்டிரத்திலும் தொடர்கிறது

மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு! பால், காய்கறிகளை

சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்!

மும்பை, ஜூன் 10 இறைச்சிக்காக மாடு, ஒட்டகம், எருமை உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்காவிட்டால் உங்களுக்கு சைவ உணவுகளை வழங்கமாட்டோம் என்று கூறி மகாராட்டிர விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பால், காய்கறிகளை மகாராட்டிராவின் சாலைகளில் கொட்டி மத்திய பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.  மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக இந்த சட்டத்தை விலக்கிக் கொள்ளவேண்டும்; இல்லை என்றால் வரும் 12ஆம் தேதி முதல் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தை முடக்குவோம், அரசுக்கு ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று அந்தக் குழு அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner