எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மும்பை, ஜூன் 11 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் டில்லியில் நேற்று (10.6.2017) பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் தலைவர் சரத்பவார் கூறிய தாவது:-

மோடி தலைமையிலான மத்திய அரசு முந்தைய அய்க் கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்களையே தற்போது நடைமுறைக்கு கொண்டு வரு கிறது. புதிதாக ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக ஆதார், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை கடந்த ஆட்சியின் திட்டங்கள் ஆகும்.

பிரதமர் மோடி வெளிநாட் டில் வழங்கிய உரையின் போது தற்போது உலக அள வில் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளதாக கூறுகிறார்.

இவ்வாறு பேசுவதற்கு முன் அவர் ஒருங்கிணைந்த நாடுகள் வழங்கிய அறிக் கையை கொஞ்சம் படித்து பார்க்கவேண்டும். அதில் நமது நாட்டில் சிறுபான்மையின ருக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க முடியாமல் அரசு உள் ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் விவசாயத்தில் போதிய வளர்ச்சி இல்லாததால் பொருளாதாரம் விழுந்துவிட் டது. போதிய முதலீடு இல் லாததால் வேலைவாய்ப்பு எப்போதும் இல்லாத அள விற்கு குறைந்துவிட்டது. தற் போதைய அரசு வரவேற்க தகுதியில்லாததாகவும், மக்க ளின் அதிருப்தியையும் சம்பா தித்து வருகிறது. இவ்வாறு சரத்பவார் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner