எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஜூன் 11 மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற பாஜக மோடி அரசு குறைந்த நிர்வாகம் நிறைந்த ஆளுமை என்று முன் வைத்த திட்டத்தின்படி எந்த ஒரு சாதனையும் நிகழ்த்தப்பட் டதாகத் தெரியவில்லை.

வளர்ச்சி என்று கூறியதும் மேலோட்டமாகவே பார்க்கப் படுகிறது. முறையான தொழில் வளர்ச்சியோ, புதிய வேலை வாய்ப்புகளோ, விவசாயம் உள்ளிட்ட அதிமுக்கியமான தொழில்துறைகளில் மத்திய அரசின் அக்கறையோ ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை.

டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, விவசாயிகளுக் கான இலவச தொலைபேசி வசதி என்று பல திட்டங்கள் அறிவிப்பாகவே இருந்து வரு வதுடன், ஏற்கெனவே தொழில் துறைகளில், அரசின் சீரிய நிர் வாகத்துறைகளில் பெரும் சரிவே ஏற்பட்டு வருகிறது என் பது கண்கூடு.

நாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மூன்று கோடி எண்ணிக்கைக்கும் மேலான வழக்குகள் தேக்கமடைந்துள்ள நிலையில், நீதிபதிகள் பணி களுக்காக 1079 இடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்போதுள்ள நிலையில் 419 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

1079 நீதிபதிகள் நியமிக்கப் படுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே அனு மதிக்கப்பட்டிருந்த நீதிபதிகள் பணியிடங்களில் 419 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது எனும் கேள்விக்கு மோடி தலைமையிலான மத் திய அரசு பதில் அளிக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

 

உச்சநீதிமன்ற கொலிஜியம் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலை மீண்டும் அனுப்பு மாறு கூறியதன் பின்பு, இரண்டு மாதங்களுக்குப்பிறகு, கடந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் மத்திய அரசு  நட வடிக்கையை எடுக்கத் தொடங் கியது.

புதிய பெயர்ப்பட்டியலை ஏற்றுக்கொண்ட கொலிஜியம் கடந்த ஏப்ரலில் ஒப்புக் கொண்டு நீதிபதிகள் பணியிடங்களுக்கு அப்பட்டியலில் இருந்தவர்களை நியமிக்குமாறு பரிந்துரைத்தது.

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், உச்சநீதிமன் றத்துக்குமிடையே நீதிமன்றத் தின் ஆலோசனைக்குழுவின் நடைமுறைகளில் முருகல் நிலை ஏற்பட்டது. புதிதாக அமைக்கப்பட உள்ள ஆலோ சனைக்குழு பட்டியலை இறுதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. எது எப்படி ஆயினும் கொலிஜியம் அளிக்கின்ற பரிந் துரையின்படியே அரசு செயல் பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

புதிதாக நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 44 நீதிபதிகளில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 29 நீதிபதி களும், கருநாடக  உயர் நீதிமன் றத்தில் இரண்டு நீதிபதிகளும், கொல்கத்தாஉயர்நீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு நீதி பதிகளுமாக நியமிக்கப்பட் டுள்ளனர்.

கடந்த நவம்பரில் மத்திய அரசு பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் 43 பேர் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விளக்கங்கள் கேட்டும் கொலிஜியம் அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டது. அரசு  பரிந் துரைத்த பட்டியலில் அலகா பாத் உயர்நீதிமன்றம் மற்றும் கருநாடகா உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து புகார்கள் இருந்தன. அதனால், அரசு அளித்த பட்டி யலிலிருந்து அவர்கள் நீக்கப் பட்டார்கள்.

கடந்த வாரத்தில், மும்பை உயர்நீதிமன்றத்தில் 14 நீதிபதி கள், ஜம்மு காஷ்மீர் உர்நீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

நாடுமுழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் இதுநாள் வரையிலும் 40 லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன.  அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் 9 லட்சம் வழக்குகளுக்குமேல் நிலுவை யில் உள்ளன. அலகாபாத் உயர்நிதிமன்றத்தில் 76 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படா மல் உள்ளன.

நடுமுழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக் கான பணியிடங்கள் 45 விழுக் காட்டளவில் நிரப்பப்படாமல் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

நீதிபதிகள் நியமனம் குறித்த பொதுநல வழக்கு விசா ரணையின்போது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகர் கூறும் போது, “நீதித்துறையில் காலிப் பணியிடங்கள் குறித்து பொது நல வழக்கு வரவேற்கத் தகுந் தது. நீதித்துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற் குரிய நடவடிக்கைகளில் முன் னேற்றம் ஏற்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றங்களில் நீதிபதிக ளுக்கான பணியிடங்கள் 25 விழுக்காடு அதிகரிக்கப்படும்’’ என்றார்.

கொலிஜியம் அளிக்கின்ற பரிந்துரைகளின்படி உயர்நீதி மன்றங்களில் உள்ள நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படு வதில்லையே ஏன்? என்றும், நீதிபதிகள் மற்றும தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றங் களில் நிலுவைக்கான காரணம் குறித்து விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கடந்த சன வரியில் உச்சநீதிமன்றம் உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner