எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கொல்கத்தா,ஜூன்13நரேந்திரமோடி தலைமையிலானபாஜக அரசின் பொரு ளாதார கொள்கை பணக்காரர்களுக்கு உதவுவதாக இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது: -மோடி ஆட்சியில் பொரு ளாதார கொள்கைகள், மற்றும் சமூக அபிவிருத்தி திட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டன. பெரிய நிறுவனங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல்  ஏமாற்றி வருவதை மீண்டும் மீண்டும் நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால் மத்திய அரசு அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. ஆனால், அதேசமயத்தில் நாட்டில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற் கொலை செய்துள்ளனர். இதைப் பற்றியும் கவலைப்படாத மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது மக்களின் வரிப் பணத்தில் இருந்து மோடி அரசின் மூன்றாம் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியவில் ஏற்றுமதி குறைந்து விட்டன. நாடு முழுவதும் வறட்சி நிலவிய போதும் விவசாயத்துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியை நிரூபிக்கிறது. விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் பணக்காரர்களுக்கு உதவுவதையும், ஏழைகளை அலட்சியம் செய்வதையும் இந்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner