எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவனந்தபுரம், ஜூன் 13 டில்லியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதா ராம் யெச்சூரி தாக்கப்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்தத் தாக்குதலுக்கு டில்லி பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கண்டனம் தெரிவித்தவர்கள் தாக்குதல் நடக்கும் 3 மணிநேரத் திற்கு முன்பே கண்டனம் தெரி வித்திருந்தனர். இதிலிருந்து இது பாஜகவே நடத்திய நாடகம் என்று தெரியவந்துள்ளனர்.

இத் தாக்குதல் தொடர்பாக பாஜக தலைவர்களுள் ஒருவரும் கேரள பாஜக ஒருங்கிணைப்பாளருமான ஜெயதேவ் ஹிரேந்திரன் மாலை 5 மணிக்கு ஒரு கண்டனத்தை சமூகவலைதளத்தில் தெரிவித்தார். அதேபோல்6-.30மணிக்குகண்டன அறிக்கை ஒன்றை வெளியிட் டார். இந்த இந்த இரண்டு கண்டன அறிக்கைகளும் சமூக வலைதளங்களில் அதிகம்பகிரப் பட்டுக்கொண்டிருந்தது. சமூக வலைதளத்தில் சில பாஜக தலைவர்கள் அவருக்கு பதில் அனுப்பும் போது ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று எழுதி யிருந்தார்கள்.  இந்த கண்டன அறிக் கைகள் வந்த பிறகு 9.30 மணிக்கு பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது, அதாவது நிகழ்வு நடக்கும் 3 மணிநேரத்திற்கு முன்பே கண்டன அறிக்கை வெளிவந்துவிட்டது,  இது தொடர்பாக திருவனந்தபுரம் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலை வர் நாகப்பன் கூறியதாவது: பாஜக அலுவகம் தாக்கப்படுவது குறித்து முன்னாள் பாஜக தலைவரின் நெருங்கிய உறவினரான எஸ்.நாயர்  இச்சம்பவம் நடந்ததாக 5 மணிக்கு டில்லிக்கு தகவல் அனுப்பி இருக்கிறார். ஆனால் இரவு 9.30 மணிக்கு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  பாஜகவினரே கேரளாவில் நில வும் அமைதியை சீர்குலைக்க இதுபோன்ற வன்முறைகளை அரங்கேற்றிவருகின்றனர். என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner