எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: அசைவம் சாப் பிடும் நாள்களில் கோவிலுக்குச் செல்வது தவறா?

பதில்: கோவிலுக்குச் செல் லும் நாள்களில் அசைவம் தவிர்ப்பது நல்லது.

‘விஜயபாரதம்‘,

ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 2.6.2017

அப்படியானால் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு எதை வைத்துப் படைத்தாராம்? வாயில் நீர் சுமந்து வந்து அபிஷேகம்- பன்றி, மான், இதர வேட்டையாடிய விலங்கு களின் இறைச்சியையும்தானே படைத்தார் என்று புராணம் எழுதி வைத்துக்கொண்டு இப் படியெல்லாம் ‘விஜயபாரதம்‘ பிதற்றலாமா?

கேள்வி: ‘பஞ்ச கவ்யம்‘ என்பது என்ன?

பதில்: பசும்பால், பசுந்தயிர், பசு நெய், கோஜலம் (பசு மூத்திரம்),கோமேதம்(பசுஞ் சாணி) ஆகிய அய்ந்து பொருள்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படுவது ‘பஞ்சகவ் யம்.’ இது ஓர் அரிய மருந்து. மருத்துவநூல்களின்படிபஞ் சகவ்யம் ரத்தத்தைச் சுத்தி கரித்து நோய்களை அகற்றும் வலிமையுள்ளது.

‘விஜயபாரதம்‘, 3.3.2017

அப்படியா! உடல்நலம் பாதிக்கப்பட்டுஆந்திரமருத் துவமனையில் சேர்க்கப்பட் டாரே காஞ்சி சங்கராச்சரியார் ஜெயேந்திரசரசுவதிஅவ ருக்கு ‘ஒரு பாட்டில்’ கொடுத் திருக்கலாமே!

அண்மையில் வெளியுற வுத்துறைஅமைச்சர்சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாரே - அவருக்குக் கொடுத்திருந்தால், அறுவை சிகிச்சை அளவுக்குப் போயி ருக்க வேண்டாமே!

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிகூட அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருகிறாரே - அவருக்கும் சிபாரிசு செய்யக்கூடாதா?

ஆமாம்! எந்த மருத்துவப் பல்கலைக் கழகம் இந்தப் பஞ்சகவ்யம்ரத்தத்தைச் சுத்திகரித்து நோய்களை அகற் றுகிறது என்று சொல்லிற்றாம்?

கேள்வி: தி.க.வினர் ‘இராவணன்’ என்று பெயர் வைத்துள்ளதற்கு அவர் என்ன நாத்திகவாதியா?

பதில்: இராவணன் மிகப் பெரிய சிவபக்தன். ஒரு தங்கப் பெட்டியில் ஒரு சிவலிங்கத்தை வைத்து தினசரி பூஜை செய்து வந்தவன்.அவனுக்குத் தெரியாத சாஸ்திரமோ, வேதங் களோ கிடையாது.

‘விஜயபாரதம்‘, 9.6.2017

சரி, அவர்கள் வழிக்கே வருவோம்!

அடுத்தவன் மனைவியை இராவணன் அடித்துக் கொண்டு போய்விட்டான் என்று அவர்கள் சொல்லுகி றார்களே, அந்த சிவபக்தி, வேதப் புத்தி அவனை ஏன் நல்வழிப்படுத்தவில்லையாம்? (‘பூமாரங்’ என்பது இதுதான்!) இராவணனை அரக்கன் என்று சொல்லும்பொழுது - ஆரியர்களின் எதிரி என்று ஆகிவிடுகிறதே - அதனால்தான் தி.க.வினர் அப்பெயரைச் சூட்டிக் கொள் கின்றனர்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner