எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘தமிழகத்தில் கண்டிப்பாக பா.ஜ.க. காலூன்றும் என்றும், ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடியை ஏற்றியே தீருவோம்‘’ என்றும் திருச்சியில் பேசிய தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராசன் கூறினார் - இது செய்தி.

ஆட்சியையே பிடித்தாலும்கூட, கோட்டையில் மூவர்ண அசோக சக்கரம் பொறித்த கொடியைத்தான் ஏற்ற முடியுமே தவிர, அப்போதும் காவிக் கொடியை கோட்டையில் ஏற்ற முடியாது என்பதுகூட புரியாத நிலையில், அக்கட்சியின் தலைவர் உள்ளது உள்ளபடியே பரிதாபம் அல்லவா?

அட அரசியல் அறிவு சூன்யங்களே! இனியாவது இப்படி உளறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்!

கட்டிய டெப்பாசிட்டையாவது வாங்குவீர்களா? அதற்கு முயற்சி செய்யுங்கள் - அதுவே உங்களுக்கு நல்லது!

- கருஞ்சட்டை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner