எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சண்டிகர், ஜூன் 15 சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத் தரவை அரியானா மாநில நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

‘பாரத் மாதா கீ ஜே எனும் முழக்கத்தை எழுப்ப முடியாது  என்று மறுப்பவர்களின் தலைகளைத் துண்டிக்க வேண்டும்' என்று ராம்தேவ் தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அரியானா மாநிலம், ரோதக்கில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுபாஷ் பத்ரா என்பவர் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை கடந்த மார்ச் மாதம் விசாரித்த நீதிமன்றம், பாபா ராம்தேவுக்கு சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டது.

அந்த சம்மனை ஏற்று, ரோதக் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 12-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாபா ராம்தேவ் நேரில் ஆஜ ராகவில்லை. இதையடுத்து, ராம்தேவுக்கு எதிராக பிணை யில் வெளிவரக்கூடிய பிடி யாணையை நீதிமன்றம் பிறப் பித்தது. அப்போது ராம்தேவ் ஜூன் 14- ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ரோதக் நீதிமன்றத்தில் இந்த வழக்கு புதன்கிழமைமீண்டும்விசா ரணைக்கு வந்தது. அப்போதும் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகவில்லை.

எனவே, ராம்தேவுக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

ஆகஸ்ட்

3 ஆம் தேதிக்கு...

மேலும், இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசார ணையை ஆகஸ்ட் மாதம் 3- ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner