எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: இன்று வடலூர் வள்ளலார் நம்மிடையே உயிருடன் இருந்தால்...?

பதில்: இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியிருப்பார்.

- ‘விஜயபாரதம்‘,

ஆர்.எஸ்.எஸ். இதழ், 16.6.2017

ஏன் இதோடு நிறுத்தி விட்டீர்கள்? அதே வடலூரார் வேதம், ஆகமம்பற்றிக் கூறியவற்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டியதுதானே!

வேதா கமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்

வேதாகமத்தின் விளைவறிவீர் - சூதாகச்

சொன்னவையல்லால் உண்மை வெளிதோன்ற உரைக்கவில்லை

என்ன பயனோ இவை? (5516)

வேதாகமங்கள் எல்லாம் வீண் புரட்டு என்று பாடியிருக்கிறாரே வடலூர் வள்ளலார் - ‘விஜயபாரதம்' இதனை ஏற்குமா?

கேள்வி: யார் உண்ணவேண்டும் என்று அரசு முடிவு செய்வது சரிதானா என்கிறாரே, ஸ்டாலின்?

பதில்: அது சரி... எங்கள் குழந்தைகள் ஹிந்தி படிக்கக்கூடாது என்று சொல்ல ஸ்டாலினும், திருமாவும் யாரு?

- ‘விஜயபாரதம்‘, ஆர்.எஸ்.எஸ். இதழ்

இந்தியோ, சமஸ்கிருதமோ, பிரெஞ்சோ படிக்கவேண்டாம் என்றா ஸ்டாலின் சொன் னார்? திணிக்காதே என்றுதானே சொல்கிறோம், இதுகூடப் புரியாதவைகளுக்கு எழுத்தாணி ஒரு கேடா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner