எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய சுதந்திரப் போராட்டத் தீயை நாடகத்தின்மூலம் மூட்டிப் பரவச் செய்தவர் ஒருவர் உண்டு என்றால், அவர்தான் விசுவ நாததாஸ் (உண்மைப் பெயர் தாசரிதாஸ்).

அவர் பிறந்தது முடித்திருத்து வோர் சமுதாயம் ஆயிற்றே! பார்ப்பனீயக்குல்லாய்ப்போட்ட தேசியத்தில் இத்தகையவர்க ளுக்கு உரிய இடம் எங்கிருந்து கிடைக்கப் போகிறது?

புராண நாடகங்கள்தான் பெரும்பாலும் - அந்தப் பாத்திரங் களிலும் வெள்ளையர் எதிர்ப்பு வெடிகுண்டாக வந்து விழும்.

வள்ளித் திருமண நாடகத்தில் கதிர்களைத் தின்னவரும் பற வைகளை விரட்டிட கவண் எறியும் காட்சி! அதற்கான ஆலோல பாட்டில்கூட ‘வெள் ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா’ என்பதில் அந்த வெள்ளை என்பது வெள்ளையர்களை ஜாடை காட்டும் யுக்தி அடிநாத மாக இருக்கும்!

‘‘கதர் கப்பல் கொடி தோணுது,

கரும்புத் தோட்டத்திலே''

‘‘பஞ்சாப் படுகொலை பாரினில்

கொடிது!’’

‘‘தாழ்த்தப்பட்ட சகோதரரை

தாங்குவார் உண்டா?’’

என்ற பாடல்கள் எல்லாம் மக்களை வாரிச் சுருட்டி ‘சுதந்திர’ வேட்கைத் தடத்தில், தளத்தில் நிறுத்தியது.

நாடகத்தில் நடித்துக் கொண் டிருக்கும்போதே கைதான நிகழ்வுகளும் உண்டு. (நடிகவேள் எம்.ஆர்.இராதாவுக்கும் அந்த நிலை ஏற்பட்டதுண்டு).

தியாகத் தீயில் புடம் போட்டு எடுக்கப்பட்டாலும், பார்ப்பனீயத் தின் ஜாதி சனாதனச் சுருக்கு அவர் கழுத்தை எப்பொழுதுமே நெரித்துக் கொண்டுதானிருந்தது.

புராண நாடகங்களில் கடவுள் வேடம் போட்டு நடித்தபோது, ஒரு முடிதிருத்தும் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவன் கடவுள் வேடத்தில் நடிப்பதா?என்றுஎதிர்ப்புவெடி களைக் கொளுத்திப் போட் டது பார்ப்பனீயம். பல இடங் களில் கலவரம்- நாடகம் தடை பட்டதெல்லாம்கூட உண்டு. ஒரு பக்கத்தில் ஆங்கிலேயே வெள்ளையன்என்றால்,இன் னொரு பக்கத்தில் உள்ளூர் வெள்ளையன்கள் (பார்ப்பனர் கள்).

அவருடன் நடிக்க மட்டத்தில் உசத்தியான மேல்தட்டு ஜாதிப் பெண்கள் வராத காரணத்தால், ஆண்களையே பெண் வேடம் போட்டு நடிக்கவும் ஏற்பாடு செய்தார்.

1925 இல் தூத்துக்குடிக்கு வந்த காந்தியார்முன், ‘காந்தியோ பரம ஏழை, சந்நியாசி’ என்ற பாடலை நாலரைக் கட்டை சுதியோடு பாடி அசத்தியவர். ‘என்னோடு சேர்ந்து பணியாற்றுக’ என்று காந்தியார் அழைப்பு விடுத்தார்!

1940 டிசம்பர் 31 அன்று நாடகத்தில் நடித்துக் கொண்டி ருந்தபோதே 54 ஆம் வயதில் மரணத்தைத் தழுவினார். அவரின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1886).

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner