எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் அரசை விமர்சித்த 5017 பேர் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில்தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து நாடாளு மன்றத்தில் எதிர்த்துவந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர் களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் சோதனை மேற் கொள்ளப்பட்டது.

அடங்கிப் போக மறுத்தால் வருமான வரிச்சோதனை! (தமிழகம், பீகார் மற்றும் ஒடிசா மாநில அமைச்சர்கள், மாநில கட்சி நிர்வாகி களின் வீடுகளில் தொடர் வருமான வரிச் சோதனை)

போராடினால் துப்பாக்கிச்சூடு! உற்பத்திப் பொருள்களுக்கு சந்தை நிலவரத்திற்கேற்ப விலை நிர்ணயம், இடைத்தரகர்கள் ஒழிப்பு,  கோதுமை மற்றும் கரும்பிற்கு சந்தை நில வரத்திற்கு ஏற்ப விலை வழங்குதல் மற்றும் கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மத்தியப் பிரதேச மாநில விவசாயிகள் மீது காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மன்சவுர் என்ற இடத்தில் அய்வர் உயிரிழப்பு, பண்டாலி என்ற இடத்தில் ஒருவர் உயிரிழப்பு, ரிவா பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் படுகாயமுற்ற ஒரு விவசாயி  மருத்துவமனையில்    உயிரிழப்பு.

இதுதான் காவிகளின்

ஜனநாயகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner