எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பனாஜி, ஜூன் 18  இறைச் சிக்கு மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத் திய அரசு பிறப்பித்த உத்தர வுக்கு கோவா மாநிலத்தை ஆளும் பாஜக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கால்நடைச் சந்தைகளில் இருந்து இறைச்சிக்காக பசு உள்ளிட்ட மாடுகளை விற்ப தற்கும், வாங்குவதற்கும் தடை விதித்து மத்திய அரசு அண் மையில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் போன்ற எதிர்க் கட்சிகளின் மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாஜக ஆட்சி நடைபெறும் கோவா மாநில அரசும் தற்போது மத்திய அரசின் உத்தரவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பனாஜியில் அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் செய்தியாளர்களிடம்  கூறிய தாவது:

கோவா மாநிலத்தில் குறிப் பிட்ட எண்ணிக்கையிலான மக்கள், மாட்டிறைச்சியை உண வாக சாப்பிட்டு வருகின்றனர். எனவே, மத்திய அரசின் உத்தரவு, கோவா மக்கள் மன தில் அய்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மக்கள் அனைவரையும் சைவ உணவு உண்போராக அரசு மாற்றப் போகிறது என்ற அச்சம் அவர் களிடையே ஏற்பட்டுள்ளது. அதை நாம் தெளி வுபடுத்த வேண்டியிருக்கிறது.

இதுகுறித்து, முதல்வர் மனோகர் பாரிக்கருடன் நான் ஆலோசனை நடத்தினேன். அப்போது அவர் மாநில அரசின் கருத்து குறித்து மத்திய அரசுக்கு கடிதமாக எழுதப் போவதாக தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தில், விலங் குகளுக்கு எதிரான கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கோவா அரசு கோரவுள்ளது. இதேபோல், மத்திய அரசின் உத்தரவு மீது சில ஆட்சேபணைகளையும் மாநில அரசு தெரிவிக்கவுள்ளது. சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சரும், முதல்வர் மனோ கர் பாரிக்கருடன் தொலை பேசியில் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் உத்தரவு மீது ஆட்சேபணை இருந்தால், அதுகுறித்து கடிதம் எழுதலாம் என மனோகர் பாரிக்கரை அவர் கேட்டுக் கொண்டார் என்றார் சர்தேசாய்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner