எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: திருக்குறள் கூறும் கருத்துகள் இக்காலத்திற்கும் பொருந்துமா?

பதில்:தமிழைவாழவைப் பதற்காகவே பிறவி எடுத் திருக்கிற கி.வீரமணி, ஸ்டாலின், சீமான்,திருமாபோன்றோர் வள்ளுவரின்புலால்மறுத்தல் என்பதை விளக்கக் கடமைப் பட்டவர்கள்.

‘விஜயபாரதம்‘, ஆர்.எஸ்.எஸ். இதழ், 23.6.2017

அதே திருவள்ளுவர், ‘‘எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’’ என்றும் சொல்லியிருக்கிறாரே, அதுவும் எங்களுக்குத் தெரியும்.

அது சரி,

பிறப்பொக்கும் எல்லாவுயிர்க் கும் சிறப்பொவ்வா

செய் தொழில் வேற்றுமை யான்

என்று பிறப்பில் பேதம் பேசும் இந்துத்துவாவிற்கு மரண அடி கொடுத்துள்ளாரே திருவள்ளுவர் - அதையும் கவனத்தில் கொள்ளட்டும் ‘விஜயபாரதம்.’

கேள்வி: மாட்டிறைச்சி - உண்மையில் சட்டத் திருத்தம் தான் என்ன?

பதில்: ‘சந்தைகளில் விவசாய மாடுகளை விவசாயத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்' என்பதுதான் மாடு களைக் காப்பாற்றும் புதிய சட்டத் திருத்தம். இவ்வளவுதான். மாட்டிறைச்சி விற்கவோ, சாப் பிடவோ தடையில்லை. மாட்டுப் பொங்கல்கொண்டாடுகிறமன சாட்சிஇருக்கிறஎந்தவிவசாயி யும் மாட்டுக்கறி சாப்பிட மாட்டான்.

(அதே ‘விஜயபாரதத்தில்’)

மாட்டிறைச்சி  விற்கவோ, சாப்பிடவோ தடையில்லை என்பது உண்மையானால் சந் தையில் மாடுகளை விற்கத் தடை ஏன்? ‘சந்தை’ என்பது இந்துத்துவாவாதிகள் மதிக்கும் கங்கையோ!

மற்ற மற்ற இடங்களில் விற்கலாம் - சந்தையில் மட்டும் விற்கக்கூடாது என்பதற்கு என்ன விசேட காரணங்கள்? சந்தைப் பொருளாதாரம் பேசும் சங் பரிவாரங்களுக்குத்தான் வெளிச்சம்.

அவர்களின்இந்துமத நூல்களில்பசுவைக்கொன்று யாகம்நடத்தியதுஎல்லாம் மறந்து போச்சா? யாகத்தில் கொல்லப்பட்ட மாமிசத்தைப் புசிக்காதவன் நரகத்திற்குப் போவான் என்று சொல்லப்பட் டுள்ளதே!

மனுதர்மம் அத்தியாயம் அய்ந்து - 39 ஆம் சுலோகம் என்ன கூறுகிறது?

‘‘எக்கியத்திற்காகவேபசுக் கள்பிரம்மனால்சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன.அந்தஎக்கி யஞ்செய்தால் உலகமெல்லாம் க்ஷேமத்தை அடைகின்றது. ஆகையால், எக்கியத்தில் செய் யும் பசு ஹிம்சை ஹிம்சையல்ல’’ என்று கூறப்பட்டுள்ளதே - ‘விஜயபாரதம்‘ வகையறாக்கள் பதில் கூறுவார்களா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner