எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

செய்தியாளர்களிடையே  தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, ஜூன் 19- மாட்டுப் பிரச்சினையே இன்னும் முடியவில்லை; குதிரைப் பேரப் பிரச் சினைக்கு அடுத்து வருவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

18.6.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத் தில் நடைபெற்ற ‘விடுதலை’ ராதா படத்திறப்பு நிகழ்வு முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது பேட்டி வருமாறு:

செய்தியாளர்: மாட்டுக்கறிப் பிரச்சினை குறித்து மத்திய ஆட்சியாளர்கள் இப்பொழுது மாற்றிப் பேசுகிறார்களே...?

தமிழர் தலைவர்: மத்தியில் இருக்கக்கூடிய மோடியினுடைய ஆட்சி மிகப்பெரிய எதிர்ப்பை இந்த பசுமாட்டின்மூலம், காளை மாட்டின்மூலமாக சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தியா முழுவதும் எடுத்துக்காட்டு.

வெளியில் இருக்கின்றவர்களின் எதிர்ப்பு களைவிட, அவர்களுடைய கட்சியில் இருக்கக் கூடியவர்களின் எதிர்ப்புகள், பி.ஜே.பி. ஆளும் மாநில அரசுகளின் எதிர்ப்புகள் பல மாநிலங்களையே அவர்கள் இழக்கக்கூடிய அளவிற்கு வாய்ப்பு ஏற்படும் என்கிற ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன.

எனவேதான், அதிலிருந்து மீளவேண்டும் என்பதற்காகவும், தங்களுடைய தோல்வியை வெளிப்படையாகச் சொல்லாமல், அதில் மாற்றம் செய்கிறோம் என்கிறார்கள்.

அடிக்கடி மதவாதப் பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்து தலையை நீட்டி படமெடுப்பதும், ஓங்கிய எதிர்ப்பு கைத்தடி எழும்பொழுது, உள்ளே சென்றுவிடுவதும் வழமை. எனவே, பாம்பு சாகவில்லை, உள்ளே போயிருக்கிறது - எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

செய்தியாளர்: குதிரை பேர விவகாரத்தில் வீடியோ சாட்சியைக் கொடுத்திருக்கிறோம்; ஆளுநரை சந்தித்து மீண்டும் நம்பிக்கை வாக்குக் கோருவோம் என்று தி.மு.க.வினர் சொல்லி யிருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: இப்பொழுது மாட்டுப் பிரச்சினைதான்; குதிரைப் பிரச்சினையை பிறகு பார்க்கலாம்.

- இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner