எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பனாஜி, ஜூன் 20 கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் 6 ஆவது அனைத்திந்திய இந்து மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் இந்தியா மற்றும் நேபாளத்தை இந்துநாடுகளாக(இந்துராஷ் டிரமாக) அறிவிக்க வேண் டும் என தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.

இந்து ஜனஜாகுருதி சமிதி அமைப்பின் தலைவர் சாருதத் பிங்காலே கூறும்போது,

“கோவா மாநிலத்தில் நடைபெற்ற இந்து மாநாட் டில் கலந்துகொள்ளஇந்தியா முழுவதுமிருந்தும், வெளிநாடு களிலிருந்தும் வந்தனர். பல் வேறு இந்து அமைப்புகள் தொடர்ச்சியாக இந்து நாட்டை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றன. இந்து மாநாட்டில் பல்வேறுதீர்மானங்கள்நிறை வேற்றப்பட்டன. இந்தியா, நேபாள நாடுகளை இந்து நாடுகளாக அறிவிக்க வேண் டும் என்றும் தீர்மானம்நிறை வேற்றப்பட்டுள்ளது. ஆறாவது அனைத்திந்திய இந்து மாநாட்டின்மூலமாக பல்வேறு அமைப்புகளையும் ஒன்றிணைத்து அனைத்துவித முயற்சிகளிலும் வெற்றி பெறும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன’’ என்றார்.

கோவா மாநிலம் போண்டா பகுதியில் ராம்நாதியில் இம் மாதம் 14 முதல் 17 முடிய நான்கு நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா, நேபா ளம், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் 132 வலதுசாரி அமைப்புகளின் சார்பில் 342 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சாருதத் பிங்காலே மேலும் கூறும்போது,

‘‘வணிகத்துறை, கல்வித் துறை,அரசியல்மற்றும்நிர் வாகத்துறைகளில்உள்ள முறைகேடுகளைஎதிர்த்து சட்டப்படியானபரப்புரையை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள் ளது. இதுபோன்ற துறைகள் முறைகேடுகள்இல்லாமல்தூய் மையாக இருந்தாலே சமு தாயத்தில்மக்களுக்கானசேவை களை நன்றாக செய்யமுடியும். அதன்மூலமாக இந்து ராஷ்டி ராவை அமைக்க முடியும். இந்த முடிவை ஏற்று செயல்பட அனைத்து இந்து அமைப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அனைத்து இந்து அமைப்புகளும் ஒன்றிணைக்கப்பட்டு செயல் படுவதன்மூலமாக நாட்டை யும்,தர்மத்தையும் (மத) பேணிக் காத்திட முடியும்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner