எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெரியாரும் - தமிழ்நாடு காங் கிரசு கமிட்டி வாடகையும்!

சென்னை மாகாண காங்கிரசு கமிட்டி ஆபிஸ் திருச்சியில் டாக்டர் ராஜன் குடியிருந்த மேல்மாடி அறையில் இருந்த காலத்தில் மாதம் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வாடகை வசூல் செய்துகொண்டார் ராஜன்.

ஆனால், அதே மாகாண காங்கிரசு கமிட்டி பெரியாரின் ஈரோடு வீட்டில் இருந்த காலத்தில் வாடகை வருஷ கணக்கில் வாங்கவில்லை. மேலும் ஆபிஸ் மேனேஜர், குமாஸ்தா, கூட்டு காரியதரிசி ஆகியோருக்கு பெரியார் வீட்டிலேயே இலவச சாப்பாடு.

திரு.ராஜன் அவர்கள் (டி.எஸ்.எஸ்.ராஜன்) காங்கிரசின் முக்கியத் தலைவராக இருந்த பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் குடும்ப எஸ்டேட் நிர்வாகத்தை விட்டுவிட்டு மற்ற வர்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்தால், தான் மட்டும் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்து அலைந்து திரிந்து மேலும் கோர்ட்டுக்குப் போகக்கூடாது என்கிற கட்சியின் தீர்மானத்திற்கு இணங்க தனக்கு வரவேண்டிய இரு பதாயிரம், முப்பதாயிரம் பெருமானம் உள்ள பிராமிசரி நோட்டுக்களை வசூல் செய்யாமல் ஏராளமான நஷ்டத்தை அடைந்தார்.

கடவுளைப்பற்றி காந்தியாரிடம் பெரியார் வினா

‘கடவுள்’, ‘கடவுள்’ என்று சதா சொல்லிக் கொண்டு இருந்த காந்தியாரையே நான் கேட்டேன். ‘‘கடவுள் என்றால் என்ன?’’ என்று. அதற்கு அவர் எனக்கு என்னமோ கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை உனக்கு விளக்க என்னால் முடியாது. நம்பிக்கைதான் கடவுள் என்று சொன்னாரே தவிர, இதுதான் கடவுள் என்று அவரால் சொல்ல முடியவில்லை. (‘விடுதலை’, 1.2.1969).

சாஸ்திரங்களும், ஸ்மிருதி களும் பொய்: காந்தியடிகள் பேச்சு

இந்தியாவில் உள்ள இந்துக்கள் எல்லோரும் ஒன்றுகூடி இப்பொழுது உள்ளபடி தீண்டாமை என்பதற்கு சாஸ்திரத்திலும், ஸ்மிருதியிலும் ஆதாரம் இருக்கிறது என்று கூறிய போதிலும், அந்த சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் பொய்யானவை என்று நான் சொல்லுவேன். இந் தக் கொள்கைகள் மூன்றையும் நான் செல்லுமிடங்களிலெல்லாம் சொல்லிக் கொண்டே போவேன். (09.01.1927 ‘குடிஅரசு’ இதழில் காந்தி யடிகள் பேசியதாக பெட்டிச் செய்தி வெளிவந்துள்ளது).

சுயமரியாதை இயக்கம் என் றால் என்ன?

சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பெயரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப்போல் அல்லாமல் அந்நியர்களிடமிருந்து யாதொரு விதமான சிறு விஷயத் தையும் மக்களின் அறிவை விளக்கி மனப்பான்மையை மாற்று வதன்மூலமேஉண்மையானவிடு தலையும்,சமத்துவத்தையும்,தன் மதிப்பையும் உண்டாக்கக் கூடிய தான ஒரு இயக்கம் ஆகும். இவ்வியக்கத்தில் முக்கிய கொள் கைகள் எல்லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவது ஆகும். ஆதலால், சுயமரியாதை இயக்கம்என்பதை‘‘அறிவுவிடு தலைஇயக்கம்''என்றேசொல்ல லாம். இதன் உண்மை விளங்க வேண்டுமானால்,

ஒரு நேர்மயை£ன மனிதன் தனது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும், நிர்பந்தத்தையும் நினைத்துப் பார்ப்பானேயானால், இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும். (‘குடிஅரசு’, 25.09.1929).

(நூல்: ‘‘பெரியாரைத் தெரியுமா?’’ தொகுப்பாசிரியர் நீலன் - 044-24355052).

இதுபோல் 205 அரிய தகவல்கள் தந்தை பெரியார்பற்றி இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner