எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அகமதாபாத், ஜூன் 21 அகமதா பத்திலுள்ளசர்க்யூட்அவுஸ் காந்தியாரின்நினைவிடமாக உள்ளது. பல சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் இந்த நினை விடம்  தற்போது பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் பொருள்களைகுவித்துவைக் கும் குடோன் ஆகா மாற்றப்பட் டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத் தில் நீதிமன்றமாக பயன்படுத் தப்பட்ட சர்க்யூட் அவுஸ் இங்கு  1922 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி நடந்த வழக்கில் காந்திக்கு அதே அறையில் 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.   இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அந்த சர்க்யூட் அவுசின் அறை காந்தி நினைவிடமாக்கப்பட்டது.   அதில் காந்தியாரின் படங்கள், மற்றும் அவரைப் பற்றிய கோப்புகள்காட்சிக்குவைக்கப் பட்டிருந்தன.காந்தியார்குறித்த ஆவணங்கள்வைக்கும்பகுதி யாகவும் இது பயன்படுத்தப் பட்டது, ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் சர்க்யூட் அவுசில் இருந்த28அறைகளில்12 அறைகள்பதஞ்சலி நிறுவனத் திற்கு ஒப்பந்தத்தில் வழங்கப் பட்டுள்ளது. அதில் காந்தியார் சிறையில் இருந்த அறையும் ஒன்று   தற்போது அந்த அறையில் பதஞ்சலி பொருள்களான நெய், உணவுப் பொருள்கள், பதஞ்சலிஊழியர்களின்சீரு டைகள் போன்றவை குவிக்கப் பட்டுள்ளன.  அதே அறையில் இருந்த காந்தியாரின் பொருள் கள் ஒரு மூலையில் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகள் யாருடைய உத்தரவின் பேரில் பதஞ்சலி நிறுவனத்துக்கு வழங்கப் பட்டன எனும் விவரம் தெரிய வில்லை.  இது குறித்து அகம தாபாத் சர்க்யூட் அவுசின் பொறுப்பாளரான சிராக் பட்டே லிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் கூறவில்லை.

மொத்தமுள்ள28அறைகளில் 12 அறைகள் பதஞ்சலி நிறுவ னத்துக்கு எந்த ஒரு வைப்புத் தொகையும் வாங்காமல் கொடுக் கப்பட்டுள்ளதாக தெரிகிறது.   இதுவரை வாடகை, மற்றும் வைப்புத் தொகை பற்றி அரசு ஏதும் முடிவு எடுக்காததால் வாடகை ஏதும் பதஞ்சலி நிர்வாகம் இதுவரையில் தர வில்லையாம். இது குறித்து குஜராத் அரசும் சரிவர பதி லளிக்கவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner