எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2010 முதல் 2015 ஆம் ஆண்டுவரையான இடைக் காலத்தில் இந்தியாவில் காவல் நிலைய மற்றும் விசாரணை மரணங்களின் எண்ணிக்கை 591 என்று மனித உரிமைக் கண்காணிப்புக் குழு (Human Rights Watch) தனது 113 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

************

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் உள்ள சாயல்குடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதானி நிறுவனத்தின் 648 மெகாவாட் மின்சக்தி நிலையத்தில் சோலார் தகடுகளைக் கழுவ 2 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்பட்டு வீணடிக்கப்படுகிறது.

************

ஊடக சுதந்திரம் குறித்து எல்லைகள் இல்லாத நிருபர்கள் (Reporters Without Borders) அமைப்பு 2017 ஆம் ஆண்டில் உலகில் இந்தியாவுக்கு அளித்துள்ள இடம் 136. பாலஸ் தீனத்துக்கு 135 ஆம் இடம். ஆப்கானிஸ்தானத்துக்கு 120 ஆம் இடமாகும்.

************

ஏழு நட்சத்திரத் தகுதி பெற்ற மகாராஜா சுற்றுலா இரயில் ஜூலை 2 ஆம் தேதி காரைக்காலுக்கும், 3 ஆம் தேதி செங்கல்பட்டுக்கும் வர உள்ளது. எட்டு நாள் பயணம் செய்ய ரூ.5 லட்சம். தங்கத்தட்டில் உணவு பரிமாறப்படும். 23 பெட்டிகள் - 88 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி சொகுசு அறை; தனித்தனி கழிப்பறை வசதிகள் உண்டாம்.

************

சீனி, சர்க்கரை தயாரிப்பதற்கு மாட்டு எலும்புகள் முக்கியம்; அவற்றிலிருந்து கிடைக்கும் பாஸ்பாரிக் அமிலம் அதற்குத் தேவைப்படுகிறது. சர்க்கரை ஆலைகளுக்கு லாரி லாரியாக மாட்டு எலும்புகள் செல்வது இதற்காகத்தான் (சீனி, சர்க்கரைக்குத் தடை போடக் கோருமா சங்பரிவார்?).

************

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த நாடுகள் 62. (இருந்தும் என்ன பயன்?)

************

இராணுவ வாகனத்தில் இளைஞர் ஒருவரை வாகனத் தின் பானெட்டில் கட்டி 5 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்ற இராணுவத்தின் கொடூர செயலுக்கு ஆம்னெஸ்டி இந்தியா கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. என்ன கொடுமையென்றால், இந்தக் கொடியவனுக்கு இராணு வத் தலைமை விருது வழங் கியதுதான்.

************

தவேந்திர நாராயண் ஜா (டி.என்.ஜா என்று சுருக்கமாக அழைக்கப்படுபவர்) பிறப்பால் பார்ப்பனர். அவர் எழுதிய நூல் The Myth of Holy Cow.
. அந்நூலில் இந்து வேதங்களில் மாட்டிறைச்சி உணவு எவ்வாறு போற்றி சிலாகிக்கப்படுகிறது என்பதை விரிவாகவே விளக்கி யுள்ளார்.

************

மேற்கு வங்க அரபி மதர சாக்களில் முஸ்லிம்களோடு இந்துமாணவர்களும்படிக் கிறார்கள். 2017 ஆம் ஆண் டில் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் 52,115 - இவர்களில் இந்துக்கள் 2,287 மாணவர்கள் ஆவார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner