எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காந்தியை உங்களுக்குத் தெரி யுமா? என்ற தலைப்பில் தோழர் ப.திருமாவேலன் ‘ஆனந்தவிகடனில்’ கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ்.பற்றி காந்தியார் தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

அவை வருமாறு:

1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், டில்லி பங்கி காலனியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் காந்தி பேசிய போது, ‘‘நீங்கள் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஆர்.எஸ்.எஸ். உண்மையில் பயனுள்ள தாக இருப்பதற்கு, தன்னலத்தியாக நோக்கத்தில் தூய்மையும், உண்மையான அறிவும் கலந்திருக்க வேண்டியது அவசியம். இந்த இரண்டும் இல்லாத தியாகம், சமூகத்தின் நாசமாகவே முடியும். தீண்டாமை உயிருடன் இருக்குமானால், இந்து சமயம் செத்துத்தான் ஆகவேண் டும். அதேபோல, இந்தியாவில் இந்துக் களைத்தவிரவேறுயாருக்கும்இட மில்லைஎன்றுஇந்துக்கள்நினைப்ப தாக இருந்தால், தங்களின் அடிமை களாகத்தான் முஸ்லீம்கள் வாழவேண் டும் என்று இந்துக்கள் நினைத்தால், இந்துக்கள் இந்து மதத்தையே கொன்று விடுவார்கள்’’ என்று காந்தி செய்த பிரகடனமும் இருக்கிறது. இதை நீங்கள் கேட்பீர்களா அமித்ஷா?

அந்தக்கூட்டத்தில்தான்,காந்தி பேசி முடித்த பிறகு, ‘‘தீமை செய்ப வரைக் கொன்றுவிட இந்து தர்மம் அனுமதிக்கிறதா?’’ என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு காந்தி, ‘‘அனுமதிக்கவில்லை. தீமை செய்யும் ஒருவர், இன்னொருவரைத் தண்டிக்க முடியாது. தண்டிப்பது என்பது அரசாங் கத்தின் வேலையேயன்றி, மக்களின் வேலை அல்ல’’ என்று பதில் சொன்னார். இதற்கு நான்கு மாதங்கள் கழித்துத்தான் காந்தி கொலை செய்யப்பட்டார்.

‘‘நானும் ஒரு ஸனாதன இந்து. வேதகாலத்தில் இருந்த பண்டைய வரு ணாசிரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்கு மதமும், ராஜ்ஜியமும் ஒன்றுதான். மதமில்லாத ராஜ்ஜியத்தை நான்வெறுத்துத்தள்ளுகிறேன்.மதத்தைக் கைவிட்ட ராஜ்ஜியம் மரணக் கூண்டுக்குச் சமமானதாகும். ஏனெனில், அது ஆன்மாவையே கொன்று விடுகிறது’’ என்று சொன்னவர் காந்தி. அரசியலில் அதிகமாக மதச் சிந்தனைகளைக் கலந்தவரும் அவர் தான். அது, அவருடைய கையை மீறிப் போகும் அளவுக்கு அதிகமானபோது, ‘‘அந்தப் பாவத்தைச் செய்தவன் நான்தான்’’ என்று மன்னிப்புக் கேட்ட வரும் காந்திதான். இதை நீங்கள் பின்பற்றுவீர்களா அமித்ஷா?

பிரார்த்தனையின்போது குரான் ஓதக்கூடாது என்று காந்திக்கு மிரட்டல் கடிதம் வந்தது. ‘‘நான் பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவதை எதிர்ப்பவர்கள், கூட்டத்துக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படியே வந்தாலும் அவர்கள் விரும்பினால், என்னைக் கொன்று விடட்டும். நான் கொல்லப்பட்டாலும்கூட ராமா, ரகீம் என்ற பெயர்களை உச்சரிப்பதை விட மாட்டேன். எனக்கு அவ்விரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள்தாம். இந்தப் பெயர்களை உச்சரித்துக் கொண்டே நான் சந்தோஷமாக இறப்பேன்’’ என்றார் காந்தி.

அதே கூட்டத்தில்தான் காந்தி சொன்னார், ‘‘இந்தியா இந்துக்களுக்கு மட்டும், பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று சொன்னால், இரண்டும் விஷம் வழிந்தோடும் தேசங்களாகி விடும். ஆனால், நான் கனவு காணும் நாடு அன்பு நதிகள் வழிந்தோடும் நாடாகும்‘’ என்றார். விஷம் வழிந்தோடுவதற்கான சூழ்நிலைகளைத்தான் அண்மைக்கால மாகப் பார்த்து வருகிறோம். காந்தியின் பிம்பத்தைச் சிதைப்பதன்மூலமாக, ‘எல் லோரும் இந்தியர்’ என்ற சித்தாந்தம் சிதைக்கப்படுகிறது.

(‘ஆனந்தவிகடன்’, 21.6.2017, பக்கம் 102-105)

‘‘டில்லி மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் நடைபெற்ற எண்ணற்ற கொலைகளின் பின்னணியாக ஆர்.எஸ்.எஸ். இருந்தது எல்லோரும் அறிந்த உண்மை’’ என்று காந்தி சொன்ன பொழுது இடைமறித்து ஒருவர் சொன்னார்:  ‘வாஹாவில் உள்ள அகதி முகாமில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செய்த சேவை குறிப்பிடத்தக்கது. ஒழுங்கு, தைரியம், கடும் பணி செய்யும் திறன் ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.’ இதற்குக் காந்தி, ‘ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். ஹிட்லரின் நாசி, முசோலினியின்பாசிஸ்டுகளின்முகாம் கள்கூட இந்தப் பண்புகளைக் கொண்டி ருந்தார்கள்’ என்று பதிலளித்தார். ‘எதேச் சதிகாரப் பார்வை கொண்ட வகுப்புவாத அமைப்பு’ என ஆர்.எஸ்.எஸ்.சை அவர் வரையறுத்தார்.”

இதற்குமேல் என்ன தேவை? ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிசம் என்பதற்கு?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner