எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 22  யோகா சாமியார் ராம்தேவின் பதஞ்சலி வியாபார நிறுவனத்துக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் பிரமாணப் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது 2014- ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தலைநகர் டில்லியில் ஒரு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ராம்தேவ் மற்றும் மோடி ஒன்றாக மேடையேறினர். ஊழலை ஒழிக்க மோடிக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண் டும் என்று ராம்தேவ் முழக்கமிட்டார். அந்தப் பேரணிக்கான அனைத்து செலவையும் ராம்தேவே முன்னின்று செய்தார். பேரணிக்கான செலவு மட்டுமே ரூ.3 கோடியைத் தொட் டது. அந்தப் பேரணி அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அதற்குக் குறைந்த பட்சம் 5 கோடி வரை செலவாகியிருக்கலாம்,

இந்த மாபெரும் பேரணி முடிந்த பிறகு 25- ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த ஒரு கூட்டம் குறித்து யூடியூப் காணொலியில் 4 நிமிடம் இடம் பெறக்கூடிய ஒரு நிகழ்வு வெளியானது. இதை  வெளியிட்டது யார் என்று தெரியவில்லை; இன்றும் இந்த காணொலி யூடியூப் உள்ளதில் இன்றைய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், வெளிறவுத்துறை அமைச்சர், மற்றும் இதர முக்கிய அமைச் சர்களாக பதவியேற்கவிருந்தவர்கள் ஒன்றாக இருந்து ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையொப்பமிடுகின்றனர்.  அந்த பிரமாணப் பத்திரத்தில் பசுக்களைப் பாதுகாப்போம், நாட்டில் தயாரிக்கும் பொருள்களுக்கு(சுவதேசி) முக்கியத்துவம் கொடுப்போம், என்று இருந்தது,

அந்தவீடியோவில் ‘‘நாட்டில் கோடிக் கணக்கான இந்துக்களின் உண்மையான தேசப்பற்று வெளிப்பட்டுள்ளது, இந்துக்களின் ஒற்றுமையின் பலனை இங்கே காண்கிறோம். தேசப்பற்றின் காரணமாகத்தான் இந்த பிரமாணப் பத்திரத்தில் அனைவரும் கையொப்பமிட்டுள்ளனர்’’ என்று ராம்தேவ் பேசும் காட்சியும் உள்ளது, அப்பிரமாணப் பத்திரத்தில் எல்.கே.அத்வானியும் கையெழுத் திட்டுள்ளார்.

இது குறித்து அத்வானியின் தனி உதவியாளர் தீபக் சோப்ரா கூறியதாவது, ‘‘தேசப்பற்று நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் அனைத்துப் பாஜக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அப்போது தேசநலனுக்காக அனைவரும் கையொப்பமிட வேண்டிக் கொண்டார்கள், அனைவரும் அதில் கையொப்பமிட்டார்கள், அத்வானியும் கையொப்பமிட்டார்’’ என்று கூறினார்.

சுமார் 9 முக்கிய முடிவுகளைக் கொண்ட அந்த பிரமாணப் பத்திரம் சுதேசி தயாரிப்பு களை நாடு முழுவதும் கொண்டு செல்ல உறுதுணையாக இருப்போம் என்று 7 இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளது, அதாவது சுதேசி என்றாலே பதஞ்சலி நிறுவனம் என்று தான் பொருள்.

அதாவது மிகவும் முக்கிய பொறுப்புகளை ஏற்க இருந்த பாஜக தலைவர்களிடம் முன்கூட்டியே தனது நிறுவனப் பொருள்களை விற்பனை செய்ய வைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கிவிட்டார்.

இந்தக் கையொப்பத்திற்கு ஆலோ சனை கூறியவர் மோடி. அதாவது ஒரு நாட்டு தலை மையையே தன்னுடைய பொருள்களை விற்கும் விற்பனைப் பிரதிநிதியாக அடிமையாக்கிக் கொண்டார்.  இதில் கையொப்பமிட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அனைவரும் கேபினெட் அமைச்சர்களாக பதவி யேற்றுக் கொண்டனர்.

ஒரு நாட்டு தலைமையே ஒரு சாமியாரின் பொருள்களை விற்பனை செய்வோம் என்று பிரமாணப் பத்திரத்தில் கையொப்பமிட்டுவிட்டு இன்று நாடு முழுவதும் பதஞ்சலி பொருள் களின் விற்பனைப் பிரதிநிதிகளாக வலம் வருகிறார்கள். மூன்று ஆண்டுகள் நிறைவாக வேலைவாய்ப்பு இழப்பு, தொழில், வளர்ச்சி யின்மை, ஏற்றுமதி முற்றிலும் நின்று போனது, அந்நியச் செலவானி கையிருப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் நாட்டில் பல்வேறு சிக்கல்கள் இருக்கும்போது, யோகா சாமியாரின் பதஞ்சலி நிறுவனம் மட்டும் மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் தினமும் ஈட்டிக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் ஆந்திராவில் பிரபல முடிவெட்டும் நிறுவனத்திடம் பதஞ்சலி பொருள்களை விற்பனைக்கு வைக்க பதஞ்சலி நிறுவனம் விற்பனை முகவர் ஒருவர் கேட்டிருந்தார்.

அதற்கு அந்த முடிவெட்டும் கடை நடத்துபவர், ‘‘இது முடிவெட்டும் கடை இங்கே பதஞ்சலி நிறுவனப் பொருள்கள் விற்பனை ஆகாது’’ என்று சாதாரணமாகக் கூறி, அவரை திருப்பி அனுப்பிவிட்டார்.

அவர் சென்ற சில மணிநேரங்களில் அவருக்கு யாரோ ஒருவரிடமிருந்து போன் வந்தது. உடனடியாக அவர் தன்னுடைய முடிவெட்டும் கடையின் பெயர்ப் பல கையை மாற்றி பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளை விற்பனை செய்யும் இடம் என்ற பெயருடன் சிறிய அளவு முடிவெட்டும் கடை என்ற எழுத்தும் அந்த பெயர்ப் பலகையில் இடம்பெற்றிருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner