எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூன் 22- அரசு மருத் துவர்களுக்கு முதுநிலை மருத் துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை சி.விஜய பாஸ்கர் அமைச்சர் கூறினார்.

முதுநிலை மருத்துவ மாண வர் சேர்க்கையில் அரசு மருத்து வர்களுக்கு போனஸ் மதிப் பெண் வழங்குவது தொடர் பான அரசாணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதிய தகுதிப்பட்டியல் தயார் செய்து மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட்டது.

இத்தீர்ப்புக்குத்தடை விதிக் கக் கோரி தமிழக அரசின் சார் பிலும், பல்வேறு அரசு மருத்து வர்கள் தரப்பிலும் உச்சநீதிமன் றத்தில்வழக்குத்தொடரப்பட்டுள் ளது. சென்னை ஓமந்தூரார் பல் நோக்கு அரசு மருத்துவமனை யில் நடை பெற்ற நிகழ்ச்சியில் இது தொடர்பாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியது:

கிராமப்புறங்களில் பணி யாற்றும் அரசு மருத்துவர்களை, எளிதில் அணுக முடியாத இடங்களில் பணியாற்றுவோர் என்ற வரையறைக்குள் சேர்த்து, மாணவர் சேர்க்கை நடத்தியது முறையானதே.

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தமி ழக அரசு உறுதியாக உள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner