எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரப்பிரதேசத்தில் 2012 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் முசுலிம் கள் எண்ணிக்கை 68. 2017 தேர்தலிலோ வெறும் 24 மட்டும்தான். பி.ஜே.பி. சார் பில் ஒரு முசுலிம் கூட நிறுத்தப்படவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் ஒரு முசுலிம்கூட உ.பி.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை.

***

டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் நோய்களைப் பரப்பும் ஆபத்தான ‘ஏடிஸ்’ வகைக் கொசுக்களின் ஆயுள்காலம் 40 நாள்களாக அதிகரித்துள்ளது. இது வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகமாகும். மேலும் பருவ மழைக் காலங்களில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கொசுக்கள், இப்பொழுது ஆண்டு முழுவதுமே நோய்ப் பரப்பும் காரணிகளாக மாறியுள் ளன - எச்சரிக்கை!

***

உலகம் முழுவதும்65.6 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்று அய்.நா. அகதிகள் அமைப்பு கூறுகிறது.

***

கிராமப்புற வேலை வாய்ப் பில் 24.8 விழுக்காடு, நகர்ப்புற வேலை வாய்ப்பில் 14.7 விழுக் காடும்தான் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 85 விழுக்காடு பெண்கள் அமைப்பு சாராப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

***

கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதைக் கொண்டாடிய 15 பேர் மீது தேச துரோகச் சட்டம் பாய்ந் தது. சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன் ஷிப் கோப்பை  இறுதிப் போட்டியில் இந்தி யாவை எதிர்த்து விளையாடி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைக் கொண் டாடும் விதமாக மத்தியப் பிரதேச மாநிலம் புர்கான்பூரில் சில இளைஞர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல் இருக்க உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலை யில் பொது இடத்தில் பட்டாசு வெடித்ததாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. பின்னர் மத்தியப் பிரதேசத்தின் கண்டவா மாவட்டத்தில் உள்ள சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner